Sunday, June 25, 2006

மனிதர்கள்

கடந்த வாரம் ஒரு நாள் இரவு 10 மணி அளவில் என்னுடைய நண்பர் ஒருவர் மற்றொரு நண்பருடன் மின்சார ரயிலில் தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் வழக்கம் போல கதவோரத்தில் நின்றுக்கொண்டு பயணம் செய்திருக்கிறார். மனிதருக்கு சற்று இரத்த அழுத்தம் உண்டு. மின்சார வண்டி சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடைப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தபோது நண்பர் blank-out ஆகி ஓடும் வண்டியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறார். உடன் பயணம் செய்த நண்பர் செய்வதறியாது வண்டியின் alarm chain-ஐ இழுக்க முற்பட்டபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் அவரை தடுத்திருக்கின்றனர். “உங்களை யார் கதவருகில் நின்றுக் கொண்டு பயணம் செய்யச் சொன்னது?” என்று சத்தம்போட்டு கத்தி அவரை செயல்படாமல் தடுத்திருக்கின்றனர். அவர்கள் கூறிய மற்றொரு காரணம், அவர்கள் வீட்டுக்குச் செல்ல நேரமாகும் என்பது! என்னவொரு மனித நேயம் பாருங்கள்!

உடன் பயணம் செய்த நண்பர் செல்போன் மூலமாக மற்ற நண்பர்களுக்கு விஷயம் சொல்லியிருக்கிறாா. கிண்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் ஓடிப்போய் நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லிவிட்டு ரயில்பாதையில் வண்டி வந்த திசை நோக்கி ஓடியிருக்கிறார். அந்த இருட்டில் நண்பனை அவரால் காணமுடியவில்லை. இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் கீழே விழுந்தவருடைய செல்போனுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். கிண்டி ரயில் நிலைய அதிகாரி சைதாப்பேட்டை நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லி ஒரு பணியாளை இருப்புப்பாதையில் விழுந்தவரை தேடச்சொல்லியிருக்கிறார். இந்த பணியாள் கீழே விழுந்தவரையும் அருகே கிடந்த அவருடைய செல்போனில் அழைப்பு வருவதையும் பார்த்து attend செய்திருக்கிறார். ரத்தக்களறியாக இருந்தவரை எதிர் திசையில் சென்னை பார்க் செல்லும் மின்வண்டியில் ஏற்றி General Hospitalக்கு அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட மற்ற நண்பர்கள் அடிப்பட்டவரை அழைத்துப்போய் அட்மிட் செய்து அந்த இரவில் டாக்டர்கள் துரித கதியில் அடிப்பட்டவரை கவனித்து... நூற்றுக்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு... இப்போது நண்பர் சற்று தேறிவருகிறார். கீழே விழுந்தவரை ஆஸ்பிடலில் சென்று அட்மிட் செய்ய ஆன நேரம் ஒரு மணி நேரம் தான். ஓடும் ரயிலில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவர் எனக்குத் தெரிந்து இவர் மட்டும்தான்.

விஷயம் இதுவல்ல. மனிதனுக்கே மனித உயிரின் மதிப்பு தெரியாமலிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான் இதை நான் எழுத காரணம். தனக்கு நேராவிடில் நல்லது என்கிற மெஷினாகிவிட்ட மனிதனின் இந்த மனோபாவம் இனிமேலா மாறப்போகிறது? இந்த அழகில் நாம் ஈழத்தையும் ஈராக்கையும் பார்த்து அந்த மனிதர்களைப்பற்றி விமரிசனம் செய்து வருகிறோம்.
நாம் அனைவரும் தாலிபானை விட எந்த விதத்தில் உசத்தி?

Monday, June 05, 2006

நிலாம்பூர் பங்களா

எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருப்பது போல இரயில்வேயிலும் ஆய்வாளர்கள் என்று பாவப்பட்ட பிரிவு ஒன்று இருக்கிறது. அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடைப்பட்ட அவர்களிடம் யாரும் எத்தகைய கேள்விகளையும் கேட்கலாம். அனைத்துக்கும் அவர்கள் பதிலிருத்தே தான் ஆகவேண்டும். அவர்களிடம் அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் இருக்கிறதே... அதைச் சுலபத்தில் சொல்ல முடியாது. அந்த கேள்விகள் எந்த பாடப்பிரிவிலும் இருக்கலாம். எல்லாம் அந்த ஆய்வாளர்களுடைய தினசரி ராசிபலனைப் பொருத்தது.

“எத்தியோப்பியாவில் இப்போது என்ன நேரம்?”
“தெரியவில்லை ஐயா. நான் விசாரித்துச் சொல்கிறேன்”
“பிரயோஜனம் அற்ற பிறவி. இதுகூட தெரியாமல் நீ என்ன ஆய்வாளர்? சீக்கிரம் விசாரித்துக் கொண்டு வந்து சொல்!”
“அப்படியே ஐயா”

அலைந்து திரிந்து தெரிந்துக் கொண்டு வந்து,
“ஐயா, தற்போது சரியாக விடியற்காலை மணி 04:15”
“அப்படியா... என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மாமா பையன் தற்போது தூங்கிக்கொண்டு இருப்பான். மூன்று மணிநேரம் கழித்து தொலைபேசவேண்டும். எனக்கு ஞாபகம் படுத்து”

அரசாங்க அலுவலகங்களின் முதுகெலும்பான இவர்கள் முதுகொடிந்துப் போய் இருப்பது தான் பரிதாபம். அதுவும் இரயில்வேயில் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆய்வாளர்கள் நிலைமை இருக்கிறதே இன்னமும் மோசம். தங்கும் இடமின்றி, நேரத்தில் உணவு கிடைக்காமல் அவர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அதை எழுத்தில் கொண்டு அடங்க மாட்டாது. ஃப்ளாட்பாரத்தில் படுத்து, கையேந்தி பவனில் சாப்பிட்டு... நீங்கள் அடுத்தமுறை இரயிலில் பயணம் செய்யும்போது ஃப்ளாட்பாரத்தில் படுத்துக்கொண்டு சாப்பாட்டுக்காக கையேந்திபவனை தேடித் திரிந்துக் கொண்டு இருக்கும் யாரையேனும் சந்திக்க நேர்ந்தால் யாரோ பைத்தியக்காரன் என்று தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம். அவர் ஒரு இரயில்வே ஆய்வாளராகக்கூட இருக்கக்கூடும்.

இத்தனை இருந்தும் கூட,
“என்ன சார் கொஞ்ச நாளாக உங்களைக்காணோம்?”
“நான் ‘லைன்’ல போய் இருந்தேன்” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஏதோ சார்லஸ்-கமீலா கல்யாண விருந்துக்குப் போய்வந்தது போல சொல்வார்கள்.

அத்தகைய பாவப்பட்ட பிரிவில் தான் நான் இருக்கிறேன். நான் இருப்பது “சரக்கு இயக்ககத் தகவல் அமைப்பு” என்று சிக்கலான நாமகிரணம் சூட்டப்பட்ட ஒரு பிரிவில். இந்திய இரயில்வேயில் முக்கியமான சரக்குகூடங்களுக்கு intranet மூலம் ஒரு தகவல் இணைப்பு கொடுத்து, இந்தியா பூராவும் சரக்கு வண்டி, எங்கிருந்து எங்கு சென்றாலும் மேற்பார்வை செய்ய வசதியாக, கால்குலேட்டரைக்கூட பார்க்காதவர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரை கொடுத்து அவர்கள் உயிரை எடுத்துக்கொண்டு.... இது ஒரு பெரிய மஹாத்மியம். இந்த விவரங்கள் எல்லாம் சொல்லி மாளாது. விட்டு விடுங்கள்....

இந்த “சரக்கு இயக்ககத் தகவல் அமைப்பு” ஆரம்பித்த காலத்தில் இருந்து ஷோரனூர் என்னும் கேரளாவைச் சேர்ந்த ஊரில் கம்ப்யூட்டர் இணைப்பு வேலைசெய்யவில்லை. வழக்கம் போல என்னைச் சென்று கண்டு வந்து அறிக்கை சமர்பிக்குமாறு பணித்திருந்தார்கள். ஷோரனூர் சென்று வருவது ஏறத்தாழ ஷேத்ராடனம் செல்வதற்கு சமம். வரும்வரையில் நிச்சயமில்லை. அதுவும் இல்லாமல், பழக்கமில்லாத அந்த கொட்டை அரிசியை ஜீரணம் செய்ய நான்கு மலைகளை ஏறி இறங்க வேண்டும்... வேறு வழியில்லை. போய்த்தான் ஆகவேண்டும். சபரிமலைபோகும் ரேஞ்சுக்கு இருமுடி கட்டாதகுறையாக மூட்டைமுடிச்சுடன் சாமியே சரணம் ஐயப்பா என்று மங்களூருக்கு வண்டி ஏறினேன். நாளை சாப்பாடு தூக்கம் நிச்சமில்லை.

பாலக்காட்டில் வாங்கிய வாயில் வைக்கமுடியாத தேனீருடன் (நன்றாக டீ போடும் நாயர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் போலும்!) காலை தினசரி கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது என் முதுகில் ‘பளார்’ என்று யாரோ அடிக்க திரும்பிப் பார்த்தேன்.

“டேய், என்ன தெரியல” என்று கேட்டபடி ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் கல்லூரியில் படித்த சீனுவாசன் என்ற சீனு.
“ஏன் தெரியாம? எதிர்லதான நிக்கற” என்றேன். “எப்படிடா இருக்க. உன்ன பாத்து ஒரு பத்து வருஷம் இருக்குமா?”
“மேலேயே இருக்கும். நீ எங்கடா இருக்க? என்ன வேலை செய்யற?”
“சென்னையில இருக்கேன். ரெயில்வேயில வேலை. நீ எங்க இருக்க? என்ன பண்ற?”
“நான் க்ராஸிம் ரயான்ஸ்ல புரொடக்ஷன் மேனேஜரா இருக்கேன். மாவூர் தெரியுமா உனக்கு? காலிகட் பக்கத்துல இருக்க. எங்க புரொடக்ஷன் யூனிட் அங்கதான் இருக்கு. பக்கத்துல வீடு. டெல்லியில ஒரு வொர்க் ஷாப். 15 நாளட உயிரை எடுத்தானுங்க. அப்படியே சென்னையில ஒரு வேலை. அதையும் முடிச்சிட்டு 20 நாளுக்கப்புறம் இப்பத்தான் வீட்டுக்குப்போறேன். அது சரி. நீ எங்கடா?” என்றான் சீனு.
நான் என் கதையை சொன்னேன். ஷோரனூர்ல என் வேலை இன்னிக்கும்அ நாளைக்கும் மட்டும். முடிச்சிட்டு நாளை ராத்திரி சென்னை திரும்ப ஏதாவது ஒரு வண்டி.”
“எங்கடா தங்கப் போற?” என்னைக் கேட்டிருக்கக்கூடாத ஒரு கேள்வி. “உனக்கென்னடா, ரெயில்வேகாரன். மொத்த ஏரியாவும் உன்னோடது. ஏதாவது கெஸ்ட் ஹவுஸ் இருக்கும்” என்றான் அவனாகவே.
“இல்லேடா” என்றேன் அழமாட்டாகுறையாக. திக்கித்திணறி, அவமானம் பிடுங்க நான் வெளியூரில் ‘கேர்-ஆஃப்-ப்ளாட்பாரம்’ என்பதை புரிய வைத்தேன்.
“அதனால் என்னடா” என்றான் என் நண்பன் பெருந்தன்மையாக. “பேசாமல் என் வீட்டுக்கு வந்துடு. நான் என்னோட ஒய்ஃப், ரெண்டு பசங்க மட்டும்தான். யாருக்கும் ஒன்னும் தொந்தரவு இல்லை”
இருபது நாள் கழித்து தன்னோட மனைவி மக்களைப் காண ஆவலுடன் வீட்டுக்குச் செல்லும் நண்பனோடு ஒட்டிக்கொண்டு போகும் அளவுக்கு இங்கிதம் தெரியாதவன் அல்ல நான். ஆகவே அவனோடு வருவதற்கு நாசூக்காக மறுத்தேன். “பரவாயில்லைடா. நான் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்” என்றேன்.
அவன் என்னை விடுவதாக இல்லை. தன்னுடைய கம்பெனி கெஸ்ட் அவுஸ் ஷோரனூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலாம்பூர் செல்லும் சாலையில் இருப்பதாகவும் எல்லா வசதிகளும் அங்கு உண்டு என்றும், நான் மறுப்பு சொல்லாமல் அங்கு தங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். நானும் சரியென்றேன்.

ஷோரனூரில் அவனை அழைத்துப்போக கம்பெனி கார் வந்திருந்தது. அதில் என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான். ‘என்னைப் பார்த்து காப்பி அடித்து பாஸ் பண்ணிய சீனு புரொடக்ஷன் மேனேஜர். கல்லூரியில் முதல் ஆளாகப் பாஸ் செய்த நான் வெறும் புண்ணாக்கு!’ எனக்கு அடிவயிற்றில் கொஞ்சம் பொறாமைத் தீ புகைந்தது.

“நான் வீட்டுக்குப்போற வழியிலதான் உன்கிட்ட சொன்ன கெஸ்ட் ஹவுஸ். நாங்கள் அதை நிலாம்பூர் பங்களா என்று சொல்வோம். உன்னை அங்க இறக்கிவிட்டுட்டுப் போறேன். நான் வீட்ல இறங்கிட்டபிறகு உனக்கு கார் அனுப்பறேன். நீ உன் வேலை எல்லாம் பாத்துக்கிட்டு ராத்திரி வெஸ்ட் ஹவுஸ்ல இறங்கிட்டு காரை அனுப்பினால் போதும். நாளைக்கு காலைல நான் ஆபீஸ் போறப்ப மறுபடியும் உன்னை பிக்-அப் பண்ணிக்கிறேன்.”

எனக்காக இவ்வளவு செய்பவன் மேல் பொறாமை பட்டதற்காக எனக்குள் வருந்தினேன். “ஸாரிடா. என்னால் உனக்குத்தான் எத்தனை தொந்திரவு” என்றேன் மனசார.
“என்னடா பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு. என்னோட வீட்டுக்கு வந்து தங்காதது தான் எனக்கு கொஞ்சம் குறை” என்றவன், இந்த கெஸ்ட் ஹவுஸ்ல பகல்லதான் ஒரு சமையல்காரன் கம் அட்டென்ண்ட் இருப்பான். ராத்திரி யாரும் இருக்க மாட்டாங்க. நீ கதவை நல்லா தாப்பாள் போட்டுகிட்டு படுத்துக்கோ. ஒன்னும் பயமில்ல. நீ தனியா படுக்க பயப்படுவியா, என்ன?”
“சீச்சீ. இந்த வயசுல எனக்கு என்னடா பயம்?” என்றேன்.
கெஸ்ட் ஹவுஸ் ஒரு ‘ட’ வடிவ சாலை திருப்பத்தில் மூலையில் இருந்தது. கெஸ்ட்ஹவுஸ்ஸின் கிழக்கிலும் வடக்கிலும் சாலை. சென்னையின் பரபரப்பான சாலைகளைப்பார்த்துவிட்டு, இந்த வெறிச்சோடிய சாலையைப் பார்க்கும்போது விநோதமாக இருந்தது.
“இந்த வழியாக பஸ் போக்குவரத்து ஏதும் இல்லையாடா?”
“பஸ்ஸெல்லாம் பை-பாஸ் ரோடு வழியாக போயிடும். அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களுக்குப் போகும் மாட்டுவண்டிகள் மட்டும்தான் இந்த வழியாகப் போகும். பொதுவாகவே கேரளாவில் இந்த பக்கத்தில் பஸ் போக்குவரத்து கொஞ்சம் கம்மிதான்!”
கெஸ்ட் ஹவுஸ் மிகப் பெரியது எல்லாம் இல்லை. பங்களா எ்னற வறையறைக்குள் வராமல், சுமாராக ஒரு டபுள்-பெட் ரூம் அளவுதான் இருந்தது. ஆனால் அந்த வீட்டை சுற்றியிருந்த காம்பெளண்ட் சுவர் இந்த சிறிய கட்டிடத்தை சற்று பிரம்மாண்டமாக காட்டியது. காம்பெளண்ட் கேட்டிலிருந்து சுமார் 30 அடி உள்வாங்கி இருந்தது கெஸ்ட் ஹவுஸ். சற்று பழைய கட்டிடம் ஆனாலும் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டு புதிதாகக் காட்சி அளித்தது. காம்பெளண்ட்டுக்குள் நாலைந்து மரங்கள். சுகமான காற்று. ரம்யமான மணத்தோடு அடர்ந்த பூச்செடடிகள் வேறு. எனக்கு அந்த வீட்டிலேலே தங்கிவிட மனம் ஏங்கியது.

ராமு நாயர் என்கிற சமையல்காரன் கம் அட்டெனெண்ட் சுமார் அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் சீனு என்னைச் சுட்டிக்காட்டி மலையாளத்தில் ஏதோ கூற, அந்த ராமு நாயர் எனக்கு பெரிய வணக்கம் செய்தார். சீனு அவருக்கு அடுக்கடுக்காக மலையாளத்தில் உத்தரவு பிறப்பித்துவிட்டு என்னிடம், “ராமு, உன்னை நல்லா பாத்துப்பார். ஓரே கஷ்டம் அவருக்கு மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆணால் நீ சாப்பிட தங்க எல்லாவற்றுக்கும் நான் சொல்லியிருக்கேன். நீ கவலைப்படாதே. நீ பேசற தமிழை அவரால புரிஞ்சிக்க முடியும்” மீண்டும் அந்த பெரியவரிடம் ‘என்னைப் பாத்துக்கோ’ என்பது போல மலையாளத்தில் ஏதோ சொல்லிவிட்டு, “டேய், நான் கிளம்பறேன். நாளைக்கு காலையில் உன்னை வந்து பாக்கறேன்” என்று கிளம்பிவிட்டான்.

ராமு நாயர் காட்டிய ரூம் மிகவும் நன்றாக இருந்தது. இரட்டை கட்டில், பாத் அட்டாச்சுடு. ஒரு டிவி. மேஜை நாற்காலி, சோபா செட். ஜன்னல் வழியாக கிழக்குப்புற சாலை தெரிந்தது. முன்பக்க ஜன்னல் வழியாக காம்பெளண்ட் கேட் தெரிந்தது. அறை நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தது. நான் குளித்து முடித்து வரும்போது டேபிளில் என்னுடைய மதிய உணவு தயாராக இருந்தது. ராமு நாயர் நல்ல சமையல்காரர்!. இதுபோல உணவும் இருப்பிடமும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் எத்தனை நாட்களானாலும் வேலை செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
நான் சாப்பிட்டு முடிக்கவும் சீனு அனுப்பிய கார் வரவும் சரியாக இருந்தது. ஷோரனூர் ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருந்த கம்ப்யூட்டர் ஏறத்தாழ சிதிலமாக இருந்தது. ஒரு காட்சிப் பொருள், அவ்வளவு தான். அங்கிருந்த ஒரு பணியாள், ‘சாரே, இந்த டிவியில் ஏசியாநெட் வருதில்லா!’ என்றதும் எனக்கு நிலைமை புரிந்தது. அவர்களுக்கு, ‘இதில், ஏசியாநெட், சூர்யா டிவி போன்ற இன்னபிற டிவிககளும் இன்டர்நெட் போன்றவைகளும் வராது’ என்று கூறி சரக்குப் போக்குவரத்தின் மென்பொருள் அமைப்பை விளக்குவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. போதாதகுறைக்கு அவர்களுக்கு கணிப்பொறியின் அடிப்படைகளை புரிய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. இதற்குபதில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிடலாம். ‘இது தேறாது’ என்ற முடிவுக்கு வரும்போது ஏறத்தாழ மாலை ஆறுமணி ஆகிவிட்டிருந்தது. நான் கிளம்பிவிட்டேன். ராமுநாயர் கிளம்பும்முன்னர் நான் கெஸ்ட் ஹவுஸ் சாவி வாங்கிக் கொள்ள வேண்டும்.

நான் கெஸ்ட் ஹவுஸை அடையும்போது ராமு நாயர் புறப்பட தயாராக இருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. சாவியை கொடுத்துவிட்டு இரவு சாப்பாடு எனது ரூமில் இருப்பதாகவும், தான் மறுநாள் காலை 7 மணிக்கு வந்துவிடுவதாகவும் மலையாளத்தில் கூறிவிட்டு புறப்பட்டார்.

கதவைச் சாத்திக்கொண்டு சூப்பராக ஒரு குளியல் போட்டேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது சென்னையில் ஆகிற காரியமா? குளித்து முடித்ததும் கொஞ்சம் காபி சாப்பிட்டால் தேவலை என்று தோன்றியது. வரும் வழியில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாதது ஞாபகம் வரவே, அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். கொண்டு வந்திருந்த ஃபியதோர் தொஸ்தயவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளவே நேரத்தைப் பார்த்தால் இரவு ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. நாயரின் சப்பாத்தியும் டாலும் அற்புதமாக இருந்தது. கூட ஏதோ ஒரு கேரளத்துப் பச்சடி. போகும்போது நாயருக்கு ஏதாவது டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஜன்னல் வழியாக கெஸ்ட் ஹவுஸ் கேட் ஒரு ஸில்அவுட் போல தெரிந்தது. சாலையில் தூரத்தில் துடைக்காத ட்யூப்லைட் மங்கலாக ஒளிர்ந்தது. வெளியிலிருந்து வந்த சில்லென்ற காற்று கொஞ்சம் நறுமணத்துடன் அற்புதமாக இருந்தது. கொஞ்ச நேரம் ரூமிலேயே நடந்தேன். பிறகு படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டே எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. தூக்க கலக்கத்தில் திடீரென்ற ‘ஜல்...ஜல்...ஜல்...’ என்ற சப்தம் சற்று துரமாக பின்னர் சற்று நெருங்கி மீண்டும் தேய்ந்து போனதை கேட்டதும் அந்த குளிரிலும் சற்று வியர்த்தது. பெளர்ணமி முடிந்து மூன்று நாட்கள் கடந்திருந்தும் நிலா வெளிச்சம் வெளியே மெல்லிய நீல நிறமாய் படர்ந்திருந்தது. ஜன்னல் வெளியே எவ்வளவுதான் உற்றுப் பார்த்தாலும் ஏதும் தெரியாததால் சற்று நேரத்தில் அப்படியே மீண்டும் தூங்கிப்போனேன். சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அதே ‘ஜல்...ஜல்...ஜல்...’ என்ற சப்தம். நான் முழுவதுமாக விழித்துக்கொண்டேன். நான் படித்த பார்த்த திகில் கதைகள் அந்த சமயத்திலா எனக்கு நினைவுக்கு வரவேண்டும்? இருப்பினும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கதவை திறந்துக் கெர்ணடு காம்ப்பெளண்ட் கேட்டைப் பார்த்தேன். கேட் சாத்தியிருந்தது. பக்கத்தில் யாரோ நிற்பது போல இருக்கவே, நான் இருந்த இடத்தில் இருந்து குரல் கொடுத்தேன்.
“யாருப்பா அது?”
“சாரே, ஞான் பாலனாக்கும் இவிட வாட்ச்மேன் சாரே” என்றது அந்த உருவம்.
“ராத்திரியில் யாரும் கிடையாதுன்னு சொன்னாங்களே” என்றேன் சந்தேகத்துடன்.
“ஞான் லீவில் போயிருந்தது சாரே. இன்ன ஞான் திரிக்குன்னு யாரும் அறியத்தில்லா. அதனாயிட்டு அங்கன பறைஞ்சுபோயி”
நான் கேட்டுக்கொண்டே அந்த வாட்ச்மேனை ஏறத்தாழ நெருங்கினேன். மரங்கள் அடர்ந்திருந்ததால், நிலா வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்தது. இருந்த மிகக்குறைவான ஒளியில் அவனை முழுவதுமாக பார்க்க இயலாவிடினும் அவனை கணிக்க முடிந்தது. அந்த வாட்ச்மேன் சற்று சன்னமாக, நாம் பத்திரிக்கையில் பார்த்த வீரப்பனைப்போல, ஆனால் மீசை சன்னமாக வைத்துக்கொண்டு, மேலே காக்கி யூனிஃபார்ம் சட்டையுடனும், கீழே இறக்கி கட்டிய லுங்கியுடனும், கையில் ஒரு கைத்தடி வைத்துக்கொண்டு இருந்தான். அவன் குரல் எண்ணெய்விடாத கதவைப்போல சற்று கிரீச்சென்றிருந்தது.
எனக்கு தூக்கம் முழுவதுமாக போய்விட்ட காரணத்தால், அவனிடம் பேச்சு கொடுக்க நினைத்தேன்.
“ஏம்ப்பா, உனக்கு தமிழ் வருமா?”
வரும் சாரே, ஞான் கல்யாணம் கழிச்சது ஒரு தமிழ் பொண்ணுதான் சாரே”
“அப்படியா. அது சரி, அது என்னப்பா ‘ஜல்...ஜல்...ஜல்...’ ன்னு ஒரு சப்தம்” என்றேன் என் குரலில் பயம் தெரிந்துவிடாதபடிக்கு.
“ஓ! அதுவா சாரே, இங்கன மாட்டுவண்டி போகும் சாரே. நம்ப கெஸ்ட் ஹவுஸ் கார்னரில் இருக்குதில்லா. அதை சுத்தி போகுன்னு சாரே”
உண்மைதான். கெஸ்ட் ஹவுஸை சுற்றிப் போகும் சாலையில் மாட்டுவண்டி போகும்போது தூரத்தில் வரும் வண்டி சலங்கை ஒலி சன்னமாகவும்ஈ கெஸ்ட் ஹவுஸை நெருங்க நெருங்க சத்ததமாகவும், மீண்டும் விலகிப்போகும்போது அந்த சத்தம் தேய்ந்தும் போகிறது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு மாட்டுவண்டி சலங்க சத்ததுடன் கடந்துப் போனதைப் பார்த்ததும், அனாவசியமாக பயந்தது எனக்கு சற்று வெட்கமாகக்கூட இருந்தது. சட்டென்று பேச்சை மாற்றினேன்.
“என்னப்பா நீ கட்டிக்கிட்டது தமிழ்ப் பெண்ணா. வெரிகுட். எத்தனை பசங்க உனக்கு?”
“எனக்கு பசங்க இல்ல சாரே”
“சாரிப்பா. நான் கேட்டிருக்கக்கூடாது.”
“அதனால என்ன சாரே. எ்ன பொண்டாட்டி என்கூட இல்லல சாரே.” சொல்லும்போதே அவனுடைய ‘கிரீச்’ குரல் மேலும் உடைந்து, ஒரு வினோதமான அழுகையுடன், கமலஹாசன் ‘நாயகன்’ படத்தில் அழுவாரே, அதுபோல, எனக்கு ஏண்டா அவனிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது. இருப்பினும் இரு மனிதனுக்கு ஆறுதல் தருவதில் தப்பில்லை என்ற நினைப்பில்,
“ஏம்ப்பா, என்னாச்சு? அவங்க உடம்புக்கு என்ன? உனக்கு என்னிடம் சொல்வதில் ஆறுதல் கிடைக்குமுன்னா சொல்லலாம்”.
“சாரே. நான் இந்த பங்களாவுல நைட் டூட்டி பாக்கச்சொல்ல, வேறு ஒருத்தன் என் வீட்ல நைட் டூட்டி பாத்துட்டான் சாரே. சரிதான் போடின்னு தொரத்திவுட்டுட்டேன். இப்ப அவனும் தொரத்திட்டான்போல சாரே. அவளுக்கு நல்லா வேணும் சாரே. ஞான் அவளை மகாராணியாயிட்டு பாத்துக்கிட்டேன் சாரே. என் கிட்டயே துரோகம் பண்ணிட்டா சாரே” என்று மறுபடியும் அந்த ஊளையிடும் அழுகையைத் தொடர்ந்தான்.
எனக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இருந்தாலும் அந்த ஊளை அழுகை அந்த அமானுஷ்யமான மெளனத்தில் சற்று கலவரப்படுத்தியது.
“போகட்டும் பாலன். அழுவாதிங்க. இப்பத்தான் அந்த ஆள் உன் பொண்டாட்டியை விட்டுட்டு போயிட்டானே. மறுபடியும் அவளை சேத்துக்கக்கூடாதா? அந்தப் பொண்ணு உன்னைப் பாக்க வராளா?”
“அது ஏன் சாரே கேக்கற. தினம் ராத்திரி வந்து என்ன சேத்துக்கக்சொல்லி ஓரே தொந்தரவு பன்றா சாரே. நான்தான் கோபத்துல அவளை சேத்துக்கக்கூடாதுன்னு இருக்கேன். இதோ இப்பக்கூட வந்திருக்கா நோக்கு சாரே” என்று சொல்லி எனக்கு பின்னால் இருந்த புதரைக் காட்டினான். அப்போதுதான் நான் அங்கே ஒரு பெண் இருந்ததை பார்த்தேன். அதுவரை நானும் வாட்ச்மேன் மட்டும்தான் இருக்கிறோம் என்று நினைத்தக்கொண்டிருந்தபோது இந்தப் பெண்ணைப் பார்த்ததும் சற்ற சிலிர்த்தது.

வாட்ச்மேன் அவளைக் சுட்டிக்காட்டியதும், அதுவரையில் மெளனமாக இருந்த இந்தப் பெண்ணிடமிருந்து ஒரு கேவல் வெடித்து அழுகையாக மாறியது. இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அழுகை, அந்த நேரத்தில் இந்தப் பெண்ணிடமிருந்து... எனக்கு எரிச்சலாகக்கூட இருந்தது. கண்ணிறைந்த கணவனை விட்டுவிட்டு சரசமாடும் இது போன்ற பெண்களுக்கு எப்போதுதான் அறிவு வரும்? வாழ்க்கையின் அற்புதங்களை மறந்து காமத்திற்கு மட்டுமே இடம் கொடுக்கும் இது போன்ற பெண்களை வெட்டிப் போட்டால்கூட தப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அவள் அழ ஆரம்பிக்கவே, வாட்ச்மேன் பாலனின் குரல் சற்று அதிகமாகி அவளை அதட்ட அதற்கு அவள் ஏதோ பதில் சொல்ல, நான் ஒரு குடும்ப பிணக்கில் நடுவே இருப்பது சரியில்லை என்று அங்கிருந்து நகர்ந்தேன். மீண்டும் அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுத்தது தான் தெரியும். அடித்துப்போட்டாதுபோல தூக்கம்.
கதவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்தேன். காலை நன்றாக விடிந்துவிட்டிருந்தது. ராமு நாயர் காலை வேலைக்கு வந்துவிட்டார். அவரிடம் அசந்துவிட்டதாக சற்று வெட்கத்துடன் கூறி கதவைத்திறந்தேன். கேட் அருகில் என்னை அறியாமல் பார்வை போனது. வாட்ச்மேன் பாலன் டூட்டி முடிந்து போய்விட்டான் போல.
ராமு நாயர் சமையல் வேலையில் ஈடுபட, நான் குளித்து ஆயத்தமானேன். காலை சிற்றுண்டி அருந்தி, என்னுடைய உடமைகளை எல்லாம் தயார் செய்துக்கொண்ட சற்று நேரத்திற்கெல்லாம், சீனுவின் வண்டி வரும் சத்தம் கேட்டது.
“என்னடா, எல்லாம் செளகரியமாக இருந்ததா? என் மனைவியும் பிள்ளைகளும்தான் உன்னை கெஸ்ட் ஹவுஸில் விட்டுவிட்டு வந்ததுக்கு என்னை கோபிச்சிகிட்டாங்க.” என்றான்.
மற்றொருமுறை அவனுடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ராமு நாயருக்கு என்னுடைய நன்றியையும் அன்பளிப்பாக கொஞ்சம் பணமும் கொடுத்தேன். எவ்வளவு வற்புறுத்தியும் ராமுநாயர் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
காரில் ஷோரனூர் ஸ்டேஷன் வரும்போது,
“என்னடா, நல்லா தூங்கினியா? புது இடம். தனியாவேறு இருந்த. சரியா தூங்கித்தான் இருக்க முடியாது” என்றான் சீனு.
“நான் எங்கடா தனியா இருந்தேன். பங்களா வாட்ச்மேன் பாலன்தான் நேத்து டூட்டில சேந்துட்டானே. அவனோடயும் அவன் பொண்டாட்டியோடவும் அவன் குடும்பத் தகறாறை பஞ்சாயத்து பண்றத்துக்கே எனக்கு நேரம் சரியா இருந்தது” என்றேன்.
“என்னது பாலனைப் பாத்தியா?” என்றான் சீனு. “அவன் பொண்டாட்டியை வேற பாத்தியா?”
சீனு ஏன் இப்படி பேய் அறைந்தவன் போல ஆணான் என்று புரியாமல், “ஆமாடா. பொண்டாட்டியை தள்வி வைச்சுட்டானாம். அவ வந்து அவனை சேத்துக்கச்சொல்லி ஒரே அழுகை. அதை ஏண்டா கேக்கற” என்றேன் அலுப்புடன்.

“பாலன் பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு அவளை கொன்னுட்டு அவனும் தூக்கு மாட்டி செத்துப்போய் இன்னியோட ரெண்டு வருஷம் ஆச்சு!” என்றான் சீனு வியப்புடனும், பயத்துடனும்.

நான் மூர்ச்சையானேன்!


***

Saturday, May 27, 2006

மதுமிதா - ஆய்வுக் குறிப்பு

வலைப்பதிவர் பெயர்: சந்தர்
வலைப்பூ பெயர் : எழுத்து
சுட்டி(url) : http://baksa.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சென்னை
நாடு: தமிழ்நாடு இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பல நண்பர்கள்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : முதலில் 12 ஜூலை 2005 பிறகு 26பிப்ரவரி 2006
இது எத்தனையாவது பதிவு: 25க்கு மேல்
இப்பதிவின் சுட்டி(url): http://baksa.blogspot.com/2006/05/blog-post_27.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கதை கவிதைகளை பதிவு செய்ய
சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்
பெற்ற நண்பர்கள்: தாராளம்
கற்றவை: எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்து என் பிறப்பரிமை - என் எழுத்துக்கள் சுதந்திரமாகவே பிறக்கிறது
இனி செய்ய நினைப்பவை: இன்னமும் கவிதையும் கதையும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஆறறைக்கோடி தமிழர்களில் ஒருவன்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : நல்லதே நினை நல்லதே நடக்கும்

Monday, May 22, 2006

எழுத நினைத்த கதை

எல்லோரும் எழுதும்போது நான் மட்டும் விதிவிலக்கா? என்தான் நான் எழுத ஆசைப்பட்டேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்துகிறார்கள். அதில் எழுத தீர்மானித்தேன்.

எதைப் பற்றி எழுதுவது? “போலியோ தடுப்பு மருந்து போடுவதின் அவசியம்” குறித்து எழுதலாமா அல்லது “கண் தானம்”, “இரத்த தானம்”, “சிறுகுடல், பெருங்குடல் தானம்” போன்ற இன்ன பிற தானங்கள் குறித்து எழுதலாமா என்று யோசித்தேன். ஏதாவது மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள அறிவிப்பு பலகையில் இருந்து எழுதிக்கொண்டு வந்துவிடலாம். சுலபமான வேலை. ஆனால் முந்தைய இதழ்களில் இவையாவும் வெளியானது ஞாபகம் வந்தது. தீவிரமாக யோசித்தபோது தான் யாருமே எழுதத்த தயங்கும் விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியது.

சற்றேறக்குறைய தீர்மானித்து என் மனைவியிடம் சொன்னபோது “உங்களுக்கு ஏன்தான் இவ்வாறு புத்தி போகிறதோ” எ்னறு என் குமட்டில் குத்தாத குறையாக நொடித்துக் கொண்டாள். இதற்கெல்லாம் அசருபவனா நான்? நான் தீர்மானித்தால் தீர்மானித்தது தான்!

சற்று நேரத்திற்கெல்லாம் ‘என்னடா இது’ என்று கேட்டுக்கொண்டே வந்த என் அப்பா ‘எது’ என்று சொல்லாமலேயே ‘எக்கேடு கெட்டுப்போ!’ என்பது போல போய்விட்டார்.

சமையலறைக்குள் நுழைந்தேன். “அம்மா, கொஞ்சம் காபி கொடேன். எழுத நிறைய யோசனை செய்யவேண்டியிருக்கிறது” என்றேன். அம்மா காபி கலந்துக்கொண்டே, “ஏண்டா, இந்த கதை, கண்றாவியெல்லாம் உனக்கெதுக்குடா?” என்றாள். நான் ஏதும் பேசாமல் காபியைக் குடித்துவிட்டு நகர்ந்தேன்.

“அப்பா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேம்பா” என்று கத்திக்கொண்டு வந்த என் பத்துவயது அருமை புத்திரனின் குரல் திடீரென்று “ஐயோ” என்று மாற திரும்பிப் பார்த்தேன். என் மனைவி அவன் காதை திருகிக் கொண்டிருந்தாள். கதை எழுதும் என் தீர்மானம் வலுவுற்றதை உணர்ந்தேன். நான் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது!

மேஜையில் பேப்பர் பேனா. அருகில் இருக்கையில் நான். “நகரும் கை எழுதுகிறது. எழுதியதுமே நகருகிறது” என்றாரே கலில் ஜிப்ரான். அதுபோல என் கை பேனா பிடித்து பேப்ப்ர் மேல் நகர எத்தனிக்கையில் எங்கிருந்தோ வந்தாள் என் தங்கை.
“அண்ணா, நான் கேள்விப்பட்டது உண்மையா” என்றாள் மொட்டையாக.
“நீ என்ன கேள்விப்பட்டாய்?” என்றேன் நானும் வம்படியாய்.
“கண்ட கண்ட குப்பையெல்லாம் ஆபீஸ் பத்திரிகையில் எழுதி பேரைக் கெடுத்துக்காதே” என்றாள். “ஏற்கெனவே உன் பேர் சரியில்லை” என்ற த்வனி இருந்தது அவள் குரலில்.

“நான் எழுதுவது தப்பா” என்றேன் பரிதாபமாக.
“நீ எழுதுவதை தப்பென்று சொல்லல. ஆனா கண்ட கண்ட விஷயங்களை எழுதி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்காதேன்னு தான் சொல்றேன்” என்றாள். “உன் ஆபீஸில்தான் என் ஃபிரண்டோட அண்ணனும் வேலைப்பாக்கிறார் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் முத்தாய்ப்பாக.

இதை ஏன் என்னிடம் சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் சரி, நான் எழுதுவதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை!

‘சரி. வீட்டில் எழுதினால்தானே இத்தனை கலாட்டாவும். ஆபீஸில் பெரியதாக என்ன குப்பை கொட்டுகிறோம். அங்கே வைத்துக் கொள்வோம் கச்சேரியை’, என்று தீர்மானித்தேன்.

வருகை பதிவேட்டில்கையொப்பம் இடுவது தவிர வேறு எதற்கும் பேனா எடுக்காத நான் பேனாவும் கையுமாக உட்கார்ந்திருந்தது என் சக அலுவலரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

“என்ன சார், ஏதோ எழுதறீங்க?” என்றார். குரலில் சற்று நக்கல் இருந்தாற் போலிருந்தது.
“இல்ல, நம்ப ஆபீஸ் கையெழுத்து பிரதிக்கு...” என்று இழுத்தேன்.
அப்போதுதான் நான் எழுதியிருந்த தலைப்பை பார்த்தவர், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சரேலென விலகினார். நான் கவலைப்படவில்லை. தலைப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றாமல், பரிட்சைக்கு வந்த படிக்காத மாணவன் போல வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சார், குமுதம் வாரஇதழில் இருந்து உங்களுக்கு போன்” என்று என்னுடைய முதன்மை அலுவலர் என்னை விளித்தார். என்னால் நம்ப முடியாமல்ஈ தொலைப்பேசியை எடுக்க, “நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நடத்தும் கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்ததை எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவர் படித்து மிகவும் நன்றாக இருப்பதாக சிலாகித்தார். நீங்க எங்களுக்கு ஒரு கதை எழுதவேண்டும். தொடர்கதையாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்” என்றார்.
“சார், நான் வந்து...” என்பதற்குள், அவரே மீண்டும், “நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது. கல்கி ராஜேந்திரன் உங்களை அப்ரோச் பண்ணுவார். விகடன் பாலசுப்ரமணியன் கூட உங்களை நேரில் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தார். ஆனால், நீங்க எங்களுக்குத்தான் முதலில் எழுதவேணும்” என்றார். நான் பதில் சொல்லும் முன்னர், பக்கத்து மேஜைக் காரர் ‘தொப்’பென்று ஃபைலை போட்ட சத்தத்தில் கனவு கலைந்தேன்.

‘அட, கனவா!’ என்று வியந்தேன். இதெல்லாம் நிஜமாகப்போகிறது என்று நினைத்தபோது, “சார்... சார்...” என்ற குரல். “ஆ! நிஜமாகவே ஃபோனா! ஒரு வேளை விகடன் ஆபீஸில் இருந்து தானோ?” என்று நினைத்தபோது, என்னுடைய முதன்மை அலுவலர், என்னை அழைத்துக் கொண்டு வந்தார்.
“வாங்க சார்” என்றேன் சம்பிரதாயமாக.
“நீங்க ஏதோ எழுதுவதாக கேள்விப்பட்டேன்” என்றேன் நேரிடையாக.
“ஆமாம் சார். நம்முடைய கையெழுத்துப் பிரதிக்காக...” என்றேன்.
“அதெல்லாம் வேண்டாம். நன்றாக எழுதத்தெரிந்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார் அதிரடியாக.
“சார், நான்கூட நன்றாக எழுதுவேன்” என்றேன் அழாதகுறையாக.
“எது? இதுவா?” நான் எழுதி வைத்திருந்த தலைப்பைக் காட்டினார். சற்று கேலியாக சிரித்தது போலிருந்தது. போய்விட்டார்.

என்னுடைய எழுத்துக்கு, எழுதும் முன்னரே இருக்கும் எதிர்ப்பு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இன்னமும் எழுதியபிறகு எப்படி இருக்குமோ என்று பயமாக இருந்தது. என்னைப் போன்ற எழுத்தாளர்களை இந்த உலகம் புரிந்துக் கொள்ளப் போவதில்லை என்ற அலுப்புடன், தலைப்பு மட்டிலும் எழுதியிருந்த காகிதத்தை கசக்க மனமில்லாமல் அப்படியே குப்பைக் கூடையில் வீசினேன்.
‘கில்லி விளையாடுவது எப்படி?’ என்ற அந்தத் தலைப்பு என்னைப் பார்த்து ‘ஸில்லி’ என்பது போல இருந்தது.

Thursday, May 18, 2006

வாகனங்கள் ஓட்டும் பெண்கள்

சமீப காலத்தில் சென்னையின் நெருக்கடிமிகுந்த சாலைகளில் ஒரு விநோதத்தைக் கவனிக்க முடிந்தது. Pulserகளும் Unicornகளும் Apacheகளும் Bulletகளும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் போது மங்கையர்களின் Scooty Pep, Honda Activa போன்ற Gearless ஸ்கூட்டர்கள் அநாயாசமாக முன்னேறி சென்றுக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிலசமயம் அரசு பேருந்துகளின் ஆக்ரோஷ ஓட்டங்களின் நடுவே மேற்கண்ட Pulserகளும் Unicornகளும் Apacheகளும் Bulletகளும் பதறி அடித்து விலகும் போது, இந்த Scooty Pep, Honda Activaக்கள் கவலைசிறிதும் இன்றி அரசு பஸ்களுக்கு தண்ணி காட்டும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த சுலபமான வண்டியோட்டத்திற்கு கியர் இல்லாமல் இருப்பது தான் காரணமா என்றால் மேற்கண்ட Scooty Pep, Honda Activa வண்டிகளை ஆண்கள் ஓட்டும்போது அவ்வாறு பெண்களுக்கு இணையாக வேகமாக ஓட்டவில்லை. வாகனங்கள் ஓட்டுவதில் பெண்கள் திறமைசாலிகளா? அல்லது பெண்கள் வண்டியோட்டுகிறார்கள் என்று எல்லோரும் ஒதுங்கி வழிவிடுகிறார்களா?

Friday, May 12, 2006

ஒரு சின்ன சந்தோஷம்!

 ஆபீஸ்... வீடு...
வீடு... ஆபிஸ்...

சாப்பாடு... தூக்கம்...
தூக்கம்... சாப்பாடு...

வாரம் ஒருநாள் வாங்கும் பூ
மல்லிகையா... முல்லையா...

யோசனை செய்யும்
இந்த இடைப்பட்ட நேரத்தில்
விடையெட்டும் முன்னர்
கிடைக்கும்
ஒரு சின்ன சந்தோஷம்!


Wednesday, May 10, 2006

நிதர்ஸனம்

நான் வீட்டை அடையுமுன்னர் அம்மாவின் குரல் என்னை வரவேற்றது.
“வாடா சந்துரு, வாயைத் திற” என்று நீராவி எஞ்ஞினில் கரி அள்ளிக் கொட்டுவதைப்போல எ்ன வாயியல் சர்க்கதையை ஸ்பூனால் அள்ளிப் போட்டாள்.
“என்னம்மா விஷேஷம்” என்றேன் முகத்தில் இருந்த சர்க்கரையை துடைத்துக்கொண்டு.
“உங்கப்பாவுக்கு ஜியெம் அவார்ட் கிடைச்சிருக்குடா” அம்மாவின் குரல் இரயில்வே காலனியெங்கும் எதிரொலித்தது. அம்மா எப்போதும் இப்படித்தான். எதையும் அடக்கி வாசிக்கத் தெரியாது. நான் போனவருடம் பத்தாவது வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றபோது அம்மா செய்த கலாட்டாவில் பக்கத்துவீட்டு தினேஷ் அண்ணன் IASல் தேர்வு பெற்றது சாதாரண நிகழ்ச்சியாகிப் போனது.
அப்பாவுக்கு ‘ஜியெம்’ அவார்ட்! அம்மாவின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது. அம்மாவின் கையைப் பிடித்துக் குலுக்கினேன்.
“அப்பா எங்கேம்மா?”
“உள்ளே தான் இருக்கார். ஏதோ ஆபீஸ் வேலை” என்றாள் சற்று சலிப்புடன்.
அப்பா எப்போதும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் ஏதோ ஆபீஸ் வேலைதான். நான் அவரை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
“ஏம்பா, உங்கள் ஆபீஸில் உங்களைவிட்டா வேலை செய்ய யாரும் இல்லையா?”
“நான் எனக்காக வேலை செய்யறேன்டா. எனக்கு வேலை செய்வது பிடிச்சிருக்கு”
“அது சரி. வீட்டுவேலையும் கொஞ்சம் பாருங்க” - இது அம்மா.
“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே” என்பார் அப்பா. அம்மா மோவாய்கட்டையை இடித்துக் கொண்டு போவாள்.

அப்பா அடிக்கடி ஏதாவது அவார்ட் வாங்கிக்கொண்டு வருவார். ஐம்பது, நூறு, அதிகபட்சமாக இருநூறு. இவையாவும் அப்பா வீட்டுக் இனிப்பாகத்தான் கொண்டு வருவார்.
“அம்மா என்னம்மா திடீரென்று ஸ்வீட்?”
“அப்பாவுக்கு ஏதோ அவார்ட் கொடுத்தாங்களாம். அந்த பணத்துக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தார்”

ஆனால் ‘ஜியெம்’ அவார்ட் அப்படியில்லை. மிகப் பெரிய கெளரவம். இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்பா சொல்லியிருக்கிறார். அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். அவருக்கு அவார்ட் கிடைத்தது பெரிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இது மிகப் பெரிய கெளரவம். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அப்பா உள் அறையில் - ஏதோ ஆபீஸ் வேலை.
“கங்ராஜூலேஷன்ஸ் அப்பா”
“தேங்ஸ்டா”
“நீங்க கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு பலன்” என்றேன் பெரிய மனுஷன் போல.
“அதிர்ஷ்டமும் கூட. என்னைவிட எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இன்னமும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சிருக்கு”.
அப்பாவிடம் இது தான் எனக்கு பிடிக்காத விஷயம். தான் ஒரு பெரிய ஆள் எ்னறு ஒத்துக் கொள்ளவே மாட்டார். ஈகோவே இல்லாத மனுஷன்.

எனக்குத் தெரிந்து அப்பா போல யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக தெரியவில்லை. கோடி வீட்டில் இருக்கும் ராமநாதன் மாமா வேலைக்குப்போயே நான் பார்க்கவில்லை. அவரும் அப்பா போல ஒரு ஆய்வாளர் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் வீட்டில் தான் வாசம். இரயில்வேயில் இருக்கும் சலுகைகள், விடுப்புகள், வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி.

“என்ன மாமா, ஆபீஸ் போகலையா?”
“இல்லேடா சந்துரு. மாமி தூரம். ஆத்துல இல்ல. நான்தான் சமைக்கணும். அதான் சியெல் போட்டிருக்கேன்”.

இன்னொருநாள்.
“மாமாஈ நீங்க போகலையா? அப்பா ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு லைன்ல போயிருக்கார்”
“காலம்பர இருந்தே தலை கிர்ர்ருனு இருக்குடா சந்துரு. அதான் ‘ஸிக்’ பண்ணிட்டேன்”
“அது சரி. உடம்பு சரியில்லன்னு இப்ப எங்க போயிண்டிருக்கீங்க?”
“மதியம் முறுக்கு சுட்டுத் தரேன்னா மாமி. அது தான் மாவு அரைக்க போயிண்டிருக்கேன். துணி வேற ஏகப்பட்டது இருக்கு. ஊர வச்சிருக்கேன். வந்து தொவைக்கணும். தலைக்கு மேல வேல இருக்குடா. நான் வரேண்டா சந்துரு”
இந்த ராமநாதன் மாமாவுக்கு ஜன்பத்துக்கும் ‘ஜியெம்’ அவார்ட் கிடைக்காது.

ஜியெம் அவார்ட் ஃபங்ஷன். அப்பாவைப்போல நிறையப்பேர் அவார்ட் வாங்க வந்திருந்தார்கள். அவர்களுடன் கூட அவர்கள் நண்பர்கள்... உறவினர்கள்... பெண்கள் பட்டுச் ்சேலை அணிந்துக் கொண்டு ஒரு திருமண விழா போல... அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. அப்பாவைப் பார்க்கப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது. நிறையப் பேர் அப்பாவிடம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். கை குலுக்கினார்கள். அப்பா சற்று கூச்சப்படுவதாகத் தோன்றியது. அப்பாவும் எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அப்பாவின் பெயரை வாசித்ததும் விழாத் தலைவரிடம் இருந்து விருது பெற நடந்தபோது அவர் செய்த பணிகளைக் குறித்தும் அவருக்கு ஏன் விருது தரப்படுகிறது என்றும் வாசித்தார்கள். அனைவரும் கரகோஷம் செய்தார்கள். அப்பாவின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம். நான் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய சக்தியெல்லாம் திரட்டி கைதட்டினேன். அப்பா கரம் கூப்பி நன்றியுடன் விருது பெற்றுக் கொண்டார். என்னுடைய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்தது.

அப்போதுதான் அடுத்த விருது பெற ராமநாதன் ஆய்வாளர் என்று வாசித்ததும் என்னால் நம்ப முடியாமல் மேடையைப் பார்க்க சரிதான். கோடிவீட்டு ராமநாதன் மாமா தான். அவருடைய கணிகளைகுறித்து வாசித்ததை என்னால் கேட்க முடியவில்லை. என் காதில் ஏதும் விழவில்லை. நம்பஇயலாமல் மேடையை பார்த்துக் கொண்டிருந்தேன். ராமநாதன் மாமா பரிசை பவ்யமாக பெற்றுக்கொண்டு நகர்ந்தார். நான் நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சந்தோஷம் வடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ‘ஜியெம் அவார்ட்’ ? ராமநாதன் மாமாவுக்கு?

வீட்டுக்கு திரும்பும்போது அடக்கமாட்டாமல் அப்பாவிடம் கேட்டேன்.
“அப்பா, ராமநாதன் மாமாவுக்குக்கூட ஜியெம் அவார்டா? அவர் வேலையே செய்யமாட்டாரே அப்பா”

“இது மூன்றாவது முறை” என்றார் அப்பா.

Sunday, May 07, 2006

ஓட்டா அல்லது வேட்டா?

 ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு இந்த பதிவை இடுகிறேன்.  நான் இருந்த பகுதியில் மிகவும் பரபரப்பு.  மக்கள் அனைவரும் தெருவில் போய்க்கொண்டும் வந்துக்கொண்டும்.  நான் முன்எப்போதும் பார்த்திராத மக்கள் கூட இன்று ஓட்டுப் போடுவதில் கொண்ட ஆர்வம் காரணமாக ஓட்டுப் பதிவுக்கு ஆளாய்ப் பறந்துக் கொண்டிருந்தார்கள்.  ஏதும் இலவசமாய் கொடுப்பதாக இருந்தாலும் இந்த கூட்டம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.  ஒன்று மட்டும் புரிந்தது.  மக்களுக்கு ஏதோ ஒரு மாற்றம்  தேவைப்படுகிறது.  இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு 80% அளவுக்கு குறையாத ஓட்டுப் பதிவு இருக்கும் என்று தெரிகிறது.  நிறைய படித்தவர்கள் ஓட்டுப் போட வருகிறார்கள்.  அவர்கள் யாருக்கு வைக்கப் போகிறார்கள் வேட்டு என்பது மூன்றாம் நாள் தெரிந்து விடும்.

எப்போதோ எழுதியது

உனக்கும் எனக்கும் இரவுகள் ஒன்றா
விடியல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் கனவுகள் ஒன்றா
நினைவுகள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் துயரங்கள் ஒன்றா
ஆறுதல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் காதல் ஒன்றா
கண்ணீர் கவிதைகள் ஏன் உனக்கில்லை?

Monday, May 01, 2006

வேலை - சிறுகதை

“சந்துரு, கொஞ்சம் கடைக்குப் போய் வா” அம்மா சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள். நான் – சந்துரு, வேலையில்லா பொறியியல் பட்டதாரி - தினமும் இப்படி நூறுமுறை கடைக்கும், ரேஷனுக்கும், மாவுமில்லுக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறேன். கூடவே, தினப்படி, walk-in interview, spot selection interview போல இன்னபிற நேர்முகத் தேர்வுகளுக்கும் எழுத்து தேர்வுகளுக்குமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

“சந்துரு, இன்னுமா நோக்கு வேலை கிடைக்கலை? உங்கப்பா சொன்னாறே, நீ First Class Graduate-னு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. நீ இன்னும் சிரத்தையா வேலைத் தேடணும். நான் உங்கப்பா எல்லாம் SSLC முடிச்சதும் TVS-ல கதறிட்டு எங்களுக்கு வேலை குடுத்தான் தெரியுமா?” என்றார் அப்பாவுடன் சேர்ந்து வேலைப்பபார்த்து சேர்ந்து ரிடையர் ஆன ஈஸ்வரைய்யர் ஒருநாள்.

“அது தெரியாது மாமா. வேலை குடுத்துட்டு கதறினான். அதுதான் எனக்குத் தெரியும்” என்றேன் எரிச்சலில்.

“இதுதான்... இந்த வாய்க்குத்தான் நோக்கு வேலை கிட்டமாட்டன்றது. ரொம்ப கஷ்டம்” என்று முணுமுணுத்துக்கொண்டே அவர் போய்விட்டார்.

ஈஸ்வரைய்யராவது பரவாயில்லை. இந்த அப்துல் கரீம் சாயபு இருக்காறே அவர் என்றால் தான் ரொம்ப பயம். அப்பாவுடன் ஐந்தாவது வரைக்கும் படித்துவிட்டு கடைத்தெருவில் ஒரு செருப்புக்கடை வைத்திருக்கிறார். “சந்துரு பேட்டா... என்னா நீ எப்போ பாத்தாலும் ஊர் சுத்து. உங்க வாப்பா கிட்ட சொல்லி என் ஷு கடையில் வேலை போட்டு தரேன். டெய்லி பேட்டா தரேன். என்னா சொல்றே?” என்பார் ஸ்பஷ்டமாக. அவர் டெய்லி பேட்டா தருவாரோ அல்லது காலில் இருக்கும் Bata-வால் தருவாரோ... அதனாலேயே அவரை தெருக்கோடியில் பார்த்தாலே அவர் கண்ணுக்குப் படாமல் வேறே சந்துக்கு திரும்பி விடுவேன்.

‘ஐயா, நான் என்ன வேலை செய்யமாட்டேன் என்றா சொல்கிறேன்? ஆனால் ஏதாவது ஒரு வேலைப்பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாரில்லை. கிடைக்கும் எனக்கும் ஒரு வேலை... எனக்குப் பிடித்த வேலை. அப்போது வைத்துக் கொள்கிறேன் உங்களையெல்லாம்...’

“எண்டா சந்துரு, கொஞ்சம் செட்டியார் கடைக்குப் போய் வாயேன்டா” என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் என் அம்மா.

சற்றுமுன்னர் தான் மாவுமில்லுக்குப் போய் வந்திருந்தேன். மீண்டும் கடைக்குப் போக எரிச்சலாக இருந்தது. “ஏம்மா, ரமேஷை அனுப்பேம்மா” என்றேன் படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டிருந்த என் தப்பியை பார்த்துக் கொண்டு. அவன் +1 படிக்கிறான். இப்போது study holidays. “டேய். உன்கிட்ட சொன்னா நீ செய். அவனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு. நீ சும்மாதானே இருக்க!”

இன்னமும் அம்மா வாயில் விழுந்து எழுந்திரிக்க திராணியில்லாமல் “சரி, சரி குடும்மா” என்று பையையும் பணத்தையும் அம்மா எழுதிவைத்திருந்த பெரிய லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது தம்பி நமுட்டு சிரிப்பு சிரித்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

வழியில் ப்ரதிமா. பெயருக்கேற்றது போல பொம்மை மாதிரி இருப்பாள். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள் போலும். சற்று பின்னிய அவளுடைய நடை அதை உணர்த்தியது.

“எங்கே” என்றேன்.
“college… Hall ticket” என்றாள் தந்தி பாஷையில். எப்போதும் வாயாடும் அவளின் தந்தி பாஷைக்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், பின்னால் அவள் அப்பா.

“என்னடா சந்துரு, எப்போ வேலைக்குப் போறதா உத்தேசம்?” என்றார் அவள் அப்பா.
“சீக்கிரம் போவேன், மாமா” என்றான் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு... மாமாவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.
“என்னவோ போ! ஏதோ வேலையை தேடிண்டோமோ, அப்பனுக்கு பாரத்தை கொரைச்சோம்மோன்னு இல்லாம... இந்த காலத்ததுப் பசங்க” என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த நாட்டில் வேலையில்லா இளைஞனுக்குத்தான் எத்தனையெத்தனை தொல்லைகள்.

செட்டியார் கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லாவில் calculator- ஐ காட்டிலும் அதி வேகமாக கணக்குப் போட்டுக் கொணடிருந்த போதிலும், செட்டியார் என்னைப் பார்த்து, “சந்துரு தம்பி, லிஸ்ட்டை கொடுத்துட்டுப் போங்க மதியம் அனுப்பி வைக்கிறேன்” என்று பையையும், லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டார்.

செட்டியார் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாமா அல்லது லைப்ரரிக்குப் போகலாமா என்று யோசித்தக்கொண்டு நடந்தபோது சற்றுத் தொலைவில் போஸ்ட்மேன் கந்தசாமி வருவது தெரிந்தது. இப்போதெல்லாம் என்னுடைய ஒரே ஆறுதல். நம்பிக்கை எல்லாம் அவர்தான்.

“கந்தசாமி அண்ணே, எனக்கு ஏதாச்சும் லெட்டர்...” என்று இழுத்தேன்.
“யாரு? சந்துரு தம்பியா?” கந்தசாமிக்கு கொஞ்சம் வெள்ளெழுத்து. அவர் ரிடையர் ஆகும் முந்தையமாதம் தான் கவர்மெண்ட்டில் ரிடையர் வயதை அறுபது ஆக்கிவிட்டார்கள். இன்னமும் ஆறுமாதம் இருக்கின்றதாம் அவருக்கு அறுபது வயதாக. என்னிடம் அடிக்கடி “தம்பி, ரிடையர் வயசு அறுபத்தைஞ்சு ஆக்கப் போறாங்களாமே நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு கல்யாண வயசில் ஒரு பெண் இருப்பதாக கேள்வி!

“ஒரு லெட்டர் இருக்கு தம்பி” என்று தன் கையில் வைத்திருந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார். கவரைப் பார்த்ததும் என்நெஞ்சு சற்று படபடத்தது. கடந்த மாதம் நான் interview attend செய்த L&T நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. கடவுளை நேர்ந்துக் கொண்டு கவரைப் பிரித்தேன். மனசெல்லாம் பரபரக்க அங்கேயே கடிதத்தைப் படித்தேன்.

‘Congratulations…’ என்று ஆரம்பித்த கடிதம் எப்போது நான் வேலையில் சேர்ந்துக் கொள்ள இயலும் என்பதை தெரிவிக்கக்கோரி முடிந்திருந்தது... என்னுடைய சந்தோஷத்தில் போஸ்ட்மேன் கந்தசாமியை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் போலிருந்தது. அதிவேகமாக அவர் கையைப் பிடித்து குலுக்கினேன். “ரொம்ப தேங்ஸ்ண்ணே” என்றேன்.

“என்ன தம்பி, நல்ல விஷயமா?”

“ஆமாண்ணே, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அம்மா கடைக்கு கொடுத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை அவருக்கு தாராளமாகப் பரிசளித்தேன்.

வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது. பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது. என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர். காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது. ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது. கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள். திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.

ஓட்டமும் நடையுமாக நான் வீட்டை அடைந்தபோது, அப்பாவுடன் ஈஸ்வரைய்யரும் அப்துல கரீம் சாயபுவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். காலனி விஷயமாக இருக்கும் போலும்.

“அப்பா, எனக்கு வேலைகிடைச்சாச்சிப்பா” என்று L&T நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தேன். அப்பாவின் முகம் அதுபோல மலர்ந்து நான் பார்த்ததில்லை. கடிதத்தைக் படித்துவிட்டு “very good” என்று என் கையை பிடித்துக் குலுக்கினார். “சந்துருவுக்கு L&T-ல Engineer வேலை கிடைச்சிருக்கு” என்று மற்ற இருவருக்கும் தெரிவித்தார்.

“நேக்கு எப்பவோ தெரியும். சந்துருவுக்கு பெரிய வேலை கிடைக்கும்னு. அவன்தான் first class graduate ஆச்சே!” என்றார் ஈஸ்வரைய்யர்.

“சந்துரு பேட்டா நல்ல புள்ள ஆச்சே. மத்த புள்ளைங்க மாதிரி அங்க இங்க போவாது. அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருக்கும். அதுபடிப்புக்கு இன்னும் பெரிய இடத்துக்குப் போகும் பாருங்கோ” என்றார் அப்துல கரீம் சாயபு.
இருவா பேசியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

“சந்துரு, முதல்ல அம்மாகிட்டச் சொல்லுடா. ரொம்ப சந்தோஷப்படுவாள்” என்றார் அப்பா.

“அம்மா, எனக்கு L&T ல Engineer வேலை கிடைச்சிருக்கும்மா” என்றேன் சமையலறையில் வேலையாக இருந்த அம்மாவிடம். அம்மா அப்படியே பூரித்துப் போனாள். மாவு கையோடேயே எனக்கு திருஷ்டி கழித்தாள்.

“டேய் சந்துரு, எனக்கு சந்தோஷத்துல தலைக்கால் புரியலேடா” என்று பதட்டப்பட்டாள். “ஏதாவது ஸ்வீட் பண்ணனுமே, செட்டியார் எப்படா மளிகை சாமான் அனுப்பறதா சொன்னார்?”
“மதியம் அனுப்பறேன்னாருமா”
“அடடா, சர்க்கரை வேற தீர்ந்து போச்சே” என்றவள், “டேய் ரமேஷ், சீக்கிரம் செட்டியார் கடைக்குப் போய் சர்க்கரையை மட்டும் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுவாடா” படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்.

“அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற. நான் போயிட்டு வரேன்மா. அவன் படிக்கட்டும். நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.

“அவன் படிச்சு கிழிச்சான். நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது. அவனே போகட்டும்” என்றாள் அம்மா.

ஏரிச்சலுடன் கடைக்குக் கிளம்பிய என் தம்பியை அனுதாபத்துடன் பார்த்தேன்.

***

Sunday, April 30, 2006

தப்புக் கணக்கு

அலுவலகத்தை விட்டு மாலை வீட்டுக்குத் கிளம்பும்போ சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. இன்று மிகவும் பத்திரமாக வீடு போய் சேரவேண்டுமே என்று பலமுறை வேண்டிக்கொண்டான். காலையில் படித்த பார்த்த கேட்ட ராசிபலன்கள், இந்த நாள் எப்படி? ஆகியவை வேறு அவனை பயமுறுத்தின. தன்னுடைய பேண்ட் பாக்கட்டில் சம்பளப் பணம் பத்தாயிரம் இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். பஸ்ஸில் பிக் பாக்கெட் கும்பல் சம்பள நாள் அன்று அதிகமாக இருக்கும். கைப்பையில் பணத்தை வைத்தால் அரைபிளேடால் கிழித்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள். தன்னுடைய பாண்ட் பையில் இருப்பதே பாதுகாப்பானது. உடம்பில் அந்த ஸ்பரிசம் இருந்துக் கொண்டே இருக்கும். நாமும் சற்று எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று சந்துருவுக்குத் தோன்றியது.

இன்றைக்கென்று பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பது போல தெரிந்தது. உட்கார இடம் கிடைக்கும் பஸ்ஸுக்காக இரண்டு பஸ்களை தவறவிட்டான். அடுத்ததாக வந்த பஸ்ஸில் நல்ல வேளையாக உட்கார இடம் இருக்கவே அதில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான். சந்துருவின் போறாத காலம், அடுத்த ஸ்டாப்பிலேயே பஸ்ஸில் கூட்டம் அதிகமானது. அதற்கடுத்த ஸ்டாப்பில் இன்னும் கூட்டம் நெருக்கியடித்தது.

உட்கார்ந்திருக்கும் வரையில் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீடுவரை ஜாக்கிரதையாகப் போக வேண்டுமே என்று கலக்கமாக இருந்தது. சம்பளவாள் அன்று பணம் தவறவிட்ட கதைகளை எத்தனைமுறை படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறான். இன்றைக்கென்ன நம்முடைய முறையா? ‘சே, சே! இருக்காது’ சந்துரு தலையை உதறிக் கொண்டான்
.
சந்துரு இருப்பது மடிப்பாக்கத்தில். அலுவலகத்தில் இருந்து இருபத்தினாலு கிலோமீட்டர். நேரிடையான பஸ் கிடையாது. சைதாப்பேட்டையிலோ அல்லது வேளச்சேரியிலோ பஸ் மாறி போக வேண்டும். எப்படியும் வீடு சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகிவிடும். இன்று கிடைத்தது வேளச்சேரி பஸ். பரவாயில்லை. அங்கிருந்து மடிப்பாக்கம் போக ஆட்டோ அல்லது வேன் கிடைத்துவிடும். அதுவும் போலீஸ்காரர்கள் கெடுபிடி இல்லாமலிருந்தால்.

உட்கார்ந்திருந்த சந்துரு மேல் யாரோ உராய்வது போல இருக்கவே, யாரென்று எரிச்சலுடன் பார்த்தான். மேலே உராய்ந்தவன் சந்துரு பார்த்ததும் ‘ ஈ ’ என்று இளித்துவிட்டு, “மேலே பட்டுச்சா சார்? மன்சிக்கோ, சார்” என்றான். சந்துருக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பரட்டை தலையும், லுங்கியும், நிரந்தரமாக அவன்மீது குடியேறிவிட்ட சாராய நெடியும். திடீரென்று சந்துருவுக்கு பயமாகிவிட்டது. இவன் பிக்பாக்கெட்டாக இருக்கலாமோ?

சந்துரு மேல் அவன் அடிக்கடி சாய்வதும் சந்துரு அவனைப் பார்த்து முறைப்பதும், அந்த ஆள் ‘ ஈ ‘ என்று இளிப்பதும் அடிக்கடி நிகழ்ந்தது. “கூட்டம் நெருக்குது, சாா. நின்னுகுனு வரவுடரானுங்களா பார் சார்” என்று சந்துருவை வேறு சப்போர்ட்டுக்கு அழைத்தான். ‘வேறு வழியில்லை’ என்று சந்துரு நினைத்துக் கொண்டான். ‘வேளச்சேரி வரும்வரையில் இந்த ஹிம்சையை பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்’. ஆனால் சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி இன்னமும் பலமாக அடித்தது.

அவன் பிக்பாக்கெட் என்பதும் அவனுடைய இன்றைய குறி தாான் தான் என்பதும் சந்துருவுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி போல எந்தவித சந்தேகமும் இன்றி புரிந்துவிட்டது. அவனிடம் இருந்து தப்பிப்பதில் தான் தன்னுடைய சாமர்த்தியம் இருக்கிறது என்று சந்துரு எண்ணிக் கொண்டான். நல்லவேளையாக இந்த பஸ் வேள்சசேரியோடு சரி. வழியில் இறங்கவேண்டும் என்றால் தான் எல்லோரையும் இடித்துக் கொண்டு இறங்கவேண்டும். பிக்பாக்கெட்காரர்களுக்கும் சுலபமான வேலை. ஆனால் வேளச்சேரியில் பஸ் நின்றதும் அனைவரும் இறங்கினால் போயிற்று, என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

அந்த ஆள் வழியில் எங்காது இறங்குகிறானா என்றால் அதுவும் இல்லை. அவனும் வேளச்சேரிவரை வருவான்போல. அல்லது ‘நாம் எங்கு இறங்குகிறோமோ பின்தொடர்ந்து இறங்குவான் போலும்’ என்று எண்ணும்போதே சந்துருவுக்கு வியர்த்துக் கொட்டியது. பஸ்ஸில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனதே தவிர குறையவில்லை. அந்த லுங்கி ஆசாமியும் அவன் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை.

‘எல்லாம் என் போறாத காலம்’ என்று எண்ணிக்கொண்டான். ‘நேரம் வேறு தெரியவில்லை’. கடிகாரம் கட்டிய கையை கஷ்டப்பட்டு முன்கொண்டுவந்து இருந்த வெளிச்சத்தில் நேரம் பார்க்க முற்பட்டபோது, ஸ்ட்ராப் போடும் ‘பின்’ விட்டுப்போய் கைகடிகாரம் நல்லகாலம் சந்துரு மடியிலேயே விழுந்தது. “என்னா சார், வாட்ச் புட்டுக்கிச்சா?” என்றான் லுங்கி. “வாட்சி கெடையிலே ஒரூபா, ரெண்ரூபா குட்தியானா ‘பின்’ போட்டுத் தர்வான்” என்றான் லுங்கி மேலும் அவனாகவே. சந்துரு மனதுக்குள் ‘நேரம் சரியில்லை என்பார்களே, அது இதுதான் போலும்’ என்று எண்ணிக்கொண்டு கஷ்டப்பட்டு வாட்ச்சை தன்னுடைய இடது பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். அது அவன் அப்பா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவன் வேலையில் சேர்ந்தபோது கொடுத்த வாட்ச். ‘என்னப்பா, இந்த காலத்தில் போய் இந்த டப்பா வாட்ச் கட்டியிருக்கே’ என்று நண்பர்கள் கிண்டலடித்ததப்போது கூட இந்த வாட்சை மாற்றத் தோன்றவில்லை சந்துருவுக்கு. கொஞ்சம் சென்டிமென்டான வாட்ச். ‘சம்பளத்தில் முதல் வேலையாக இதற்கு ‘பின்’ போட வேண்டும்’. பஸ் வேளச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது.

பஸ் வேளச்சேரியை அடைந்தது. அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த லுங்கி ஆளும் இறங்கியபிறகு, கடைசி ஆளாக சந்துருவும் இறங்கிக் கொண்டான். வலது பேண்ட் பாக்கெட்டில் தொட்டுப் பார்த்துக் கொண்டான். பர்ஸ் பத்திரமாக இருந்தது. பாதி கிணறு தாண்டிய திருப்தி சந்துருவுக்கு. அடுத்த பஸ்ஸுக்கு காத்திராமல் ஏதாவது ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போய்விட வேண்டியது தான். சற்று தூரமாக ஒரு ஆட்டோ. அதைநோக்கி நடந்தபோது, தற்செயலாக பின்னால் பார்த்தான். அந்த லுங்கி ஆள் சந்துருவின் பின்னால் வருவது தெரிந்தது. சந்துருவுக்கு குபீரென வியர்த்தது. கைகுட்டை எடுத்து வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான். வேகமாக ஆட்டோவை நோக்கி நடந்தபோது, அந்த லுங்கி ஆள், “சார், சார்” என்று கூப்பிடுவது கேட்டது. கேட்காதது போல சந்துரு ஆட்டோவை நெருங்கியபோது, எதிரில் வந்த ஒரு ஆள், “சார், உங்களைத்தான் அவர் கூப்பிடுகிறார் சார்” என்றார் கர்மசிரத்தையாக. சந்துரு திரும்பிப் பார்த்ததான். அந்த லுங்கி ஆள் நின்றுக்கொண்டு அழைப்பது தெரிந்தது.

பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான் சந்துரு. ‘கத்தி, கித்தி காட்டி பணம் பிடுங்கப் போகிறானா?’ பஸ் ஸ்டான்ட் முழுவதும் நிறையப்பேர் இருப்பதால் லுங்கி இதுபோல செய்யத் துணியமாட்டான் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, லுங்கியைப் பார்த்தது “என்னப்பா என்ன வேணும்?” எ்னறான் சந்துரு குரலில் சற்று கடுமையைக் கலந்து. “இந்த வாட்ச் உன்னுதா பார், சார்” என்றான் லுங்கி ஆசாமி. அவனுடைய காலடியில் சந்துருவுடைய வாட்ச் இருந்தது. “நீ. கர்சீப் உறுவச்சொல்ல உயுந்திருக்கும் போல” என்று அவனுடைய ஊகத்தையும் சொன்னான்.

அமாம் அது சந்துருவின் வாட்ச் தான். “ரொம்ப தேங்ஸ்பா” சந்துரு குனிந்து அந்த வாட்சை எடுத்துக் கொண்டு, இதுவரை அந்த லுங்கி ஆசாமியை தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகப்பெரிய ‘சாரி’ சொல்லிக் கொண்டான். இந்த உயர்ந்த உள்ளத்தை ‘பிக்பாக்கெட்’ என்று முடிவு செய்ததற்காக மிகவும் வருத்தப்பட்டான் சந்துரு. இதற்குத்தான் ‘உருவத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்த லுங்கி ஆள் சந்துருவின் மனதுக்குள் மிகவும் உயர்ந்துப் போனான். லுங்கி ஆசாமி மனதுக்குள் உயரஉயர சந்துரு தன் மனதுக்குள் மிகவும் தாழ்ந்துப் போனான். ‘என்ன மனுஷன் நான். உருவத்தை பார்த்து எப்படி ஒரு ஆளை எடைப்போடலாம், சே!’

ஆட்டோவில் வீடு வரும்பரையில், அந்த லுங்கி ஆசாமியைத் தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகவும் வருந்தியபடியே வந்தான். அந்த ஏழ்மைநிலையிலும் சீலனாக விளங்கும் அவனை தப்பாக நினைத்ததற்கு மனதில் மறுகினான். நினைக்க நினக்க அந்த லுங்கி ஆள் சந்துர மனதுக்குள் மிகப் பெரிய மகானாகவே ஆகிப்போனான். இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவரே!

சந்துருவின் வீட வந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி காசு கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் தேள் கொட்டியதுபோல திடுக்கிட்டான்.

பேண்ட் பாக்கெட்டில் பர்ஸை காணவில்லை!

* * *

Saturday, April 29, 2006

காக்கைகள்

“மீனாட்சி... மீனாட்சி...”

பூஜையில் இருந்த சங்கரைய்யர் குரல் கொடுத்தார். மீனாட்சிக்கு அவர் அழைப்பதற்கான காரணம் தெரியும். பூஜை அறையும் சமையலரையும் பக்கம் பக்கத்தில். ஜன்னலின் வெளியே பார்த்தாள். எப்போதும்போல காக்கைகள் அருகில் இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்தது..

“மீனாட்சி... மீனாட்சி...” மீண்டும் சங்கரைய்யர் இரைந்தார்.

“இதோ வரேன்னா” மீனாட்சி பூஜை அறைக்கு விரைந்தாள்.

“பாத்தியா மீனாட்சி. எப்போதும்போல நான் பூஜை ஆரம்பிச்சதும் இந்த காக்கைகள் வந்துட்டது” சங்கரைய்யர் குரலில் ஒரு பரவசம் தெரிந்தது.

மீனாட்சி ஆமோதித்தாள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. தினம் பூஜை ஆரம்பித்ததும்
சங்கரைய்யர் காக்கைகளை பார்த்துவிட்டு குரல் கொடுப்பார். இது அவர் தினமும் சிலாகிக்கும் நிகழ்ச்சி. இந்த காக்கைகள் வருவது அவருடைய பூஜாபலன் என்கிற அசையாத நம்பிக்கை.

சில சமயம் சங்கரைய்யர் அழைக்கும் போது மீனாட்சி கைக்காரியமாக இருப்பாள். சட்டென வர இயலாமல் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் போச்சு. பிலுபிலுவென பிடித்துக்கொள்வார்.
“காக்கா தானேன்னு அலட்சியமா நினைக்காதேடி, மீனாட்சி. காக்காக்கள் எல்லாம் நம்மோட பித்ருக்கள். சனீஸ்வரன் வாகனம் மட்டுமில்லேடி, விநாயகனும் அதுதான். காக்கா இல்லேன்னா நமக்கு காவேரி ஏதுன்னேன்?”

இதற்குத்தான் என்ன கைக்காரியமாக இருந்தாலும் போட்டுவிட்டு மீனாட்சி ஓடிவருவாள்.

“எனக்கும் இந்த காக்காக்களுக்கும் ஏதோ பந்தம் இருக்குபோல. இப்படி ஒரு நாளா இரண்டு நாளா இத்தனை வருஷம் இந்த காக்காக்கள் வருதுன்னா, ஏதோ ஒரு விட்டகுறை தொட்டகுறை இருக்குடி”

இந்த காக்கைகள் மூலமாக தன்னுடைய ஜபங்கள் இறைவனை அடைவதாக நம்பினார். சில நாள் இந்த காக்கைகள் வர சற்று நேரமானாலும் மிகவும் நிலைக்கொள்ளாது போவார். பூஜைமீது நாட்டம் குறைந்து போகும்.

சிலசமயம் சங்கரைய்யர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்.
“என்னோட ஜன்மம் அடங்கினால் தான் இந்த காக்கா வரது நிக்கும்” என்றார் ஒருநாள். மீனாட்சிக்கு பகீலரன்றது.
“ஏன்னா இப்படி அச்சானியமா பேசரேள்?” என்றாள் அழமாட்டாகுறையாக.
“இவை வெறும் காக்காக்கள் இல்லேடி. நம்ப பந்துக்கள். நம்ப பந்துக்களைத் தேடி நான் போனா அவை ஏன் என்னத்தேடி இங்கே வரணும்?”
மீனாட்சி அவருடன் தர்க்கம் பண்ண தைரியம் இல்லாமல் விலகிப் போவாள். தர்க்கத்துக்கு சளைக்காதவர். இறுதியில் மனசை கலங்கடித்துவிடுவார்.
சங்கரைய்யருக்கும் இந்த காக்கைகளுக்கும் உள்ள உறவு சொல்லி மாளாது!

அன்று இரவு படுக்கும்போ சங்கரைய்யருக்கு கடும் காய்ச்சல்.. டாக்கரிடம் போவது மட்டும் அவருக்கு பிடிக்காத விஷயம். என்னத்தான் உடம்பு படுத்தினாலும் டாக்டரிம் போவதற்குமட்டும் உடன்படமாட்டார். இத்தனைவருஷம் அவர் டாக்டரிடம் எதற்காகவும் போனதில்லை.

“ஏன்னா, டாக்டரை வரச்சொல்லட்டா?” மீனாட்சி விம்மினாள்.
“துளசி தீர்த்தத்துக்கு மிஞ்சிய டாக்டர் உண்டா என்ன? இந்த உடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆகா பயப்படாதேடி, மினாட்சி”
“இல்லேன்னா, உடம்பு இந்த கொதி கொதிக்கிறதேன்னா”
“நன்னா படுத்து எழுந்தா சரியாயிடும்டி”

சரியாகவில்லை. ராத்திரி பூராவும் சங்கரைய்யர் அனத்திக்கொண்டே இருந்தார். ஜுரம் எந்த துளசி தீர்த்ததுக்கும் கட்டுப்படாமல், உடம்பு கொதித்துக்கொண்டே இருந்தது. மீனாட்சி அவர் படுக்கை பக்கத்திலேயே தூங்காமல் உட்கார்ந்து மிகவும் சோர்ந்துப் போனாள்.

விடிந்தும் விடியாததுமாக சங்கரைய்யர் எழுந்துக் கொண்டார். இன்னமும் உடம்பு சூடாகத் தான் இருந்தது.

“பூஜைக்கு எல்லாம் எடுத்து வையடி. நான் குளிச்சிட்டு வந்துடரேன்” அவரால் திடமாகக்கூட பேச இயலவில்லை. இடையிடையே இருமல் வேறு.

மீனாட்சி பயந்துப் போனாள். “வேணாம்னா. இன்னைக்கு பூஜை பண்ணலேன்னா பரவாயில்லைனா” என்ற அவளைப்பார்த்து அந்த ஜுரத்திலேயும் ஒரு முறை முறைத்தார்.

“குளிச்சிட்டு வரேன். எல்லாம் எடுத்து வை” என்றார் ஆணித்தரமாக.

"பச்சத் தணிணிலேயா குளிக்கப்போறேள். உங்களுக்கு்தான் உடம்பு சரியில்லையே. நான் கொஞ்சம் வென்னி வெச்சுத்தரேன்னா” மீனாட்சி கெஞ்சினாள்.

“பிராமணனுக்கு பச்சதண்ணி ஆகாதுன்னு சொன்ன மொத ஆள் நீதான்” சங்கரைய்யர் குளிக்கச் சென்றுவிட்டார்.

சங்கரைய்யர் குளித்துவிட்டு வரும்போது உடம்பு அளவுக்கு அதிகமாக நடுக்கமாக இருந்தது. நடக்கக்கூட சற்று தள்ளாடினார். மீனாட்சி எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள்.
சங்கரைய்யர் பூஜை செய்துக்கொண்டிருக்க, அருகில் மீனாட்சி கண்களை மூடிக்கொண்டு அவருக்கு குணமாக பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.

சற்றேரக்குறைய அரைமணி நேரம் கழித்து சங்கரைய்யர் “ மீனாட்சி” என்று பலவீனமாக கூப்பிட்டார். அருகில் இருந்த மீனாட்சி மிகவும் பயத்தில் இருந்தாள். “என்னன்னா” என்றாள். அவள் குரல் மேலெழும்பவில்லை.

“இன்னிக்கு ஒரு காக்காகூட வரலை பாத்தியா?” சங்கரைய்யர் அப்படியே கண்கள் நிலைகுத்த தரையில் சரிந்தார்.

மீனாட்சிக்கு பகீரென்றது.

தினமும் காக்கைக்கு வைக்கும் கவளம் சாதம் சமையலறை ஜன்னலில் இன்றைக்கு வைக்காதது ஞாபகம் வர தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

***

Wednesday, April 26, 2006

ஹைகூ

 ஹைகூ (ஹை கூமுட்டை! என்றும் சொல்வதுண்டு)

அம்மாவை அந்தரத்தில்
தொங்கவிட்டனர் தொண்டர்கள்
தோரணத்தில்...

அம்மாவும் கலைஞரும்
அருகருகே சிரித்தபடி
படக்கடையில்...  

பூட்டிய கோவிலுக்குள்
காக்கும் கடவுள்
வெளியே காவலாளி!




Monday, April 24, 2006

HOPE

 Little Drops of Tear
Has the world within
When it trickles down
And then
Crumbles to ground...

மாற்றம் - சிறுகதை

 “நான் நானாக இல்லை - நிஜம்தான்
நீ, நீயாகத்தான் இருக்கின்றாயா?
மாறிவரும் இவ்வுலகில்,
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான், நானாக இருப்பதும்
நீ, நீயாக இருப்பதும்...”

மாற்றம்

     சந்துரு உட்கார்ந்திருந்துது தூரத்தில் வரும்போதே தெரிந்தது. நான் புடவை தடுக்க நடையை எட்டிப்போட்டேன். ‘எவ்வளவு நேரமாக உட்கார்ந்திருந்தானோ?’
     “ஸாரி சந்துரு, கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
     “கொஞ்சம் இல்லை. நிறையவே லேட். இருந்தாலும் பரவாயில்லை”
    என் சந்துருவிடம் பிடித்ததே இதுதான். எப்பவும் கோபமே வராது அவனுக்கு. என்னிடம் மட்டுமல்ல. யாரிடமும் அவன் கோபத்தோடு பேசி பார்த்ததில்லை.
     “ஏன் சந்துரு, உனக்கு கோபமே வராதா?”
“ஏன் கோபப்படணும்? அட் த மோஸ்ட் வருத்தப்படலாம். கோபப்படும்போது அடுத்தவரை பாதிக்கிறோம். வருத்தம் நம்மை மட்டுமே பாதிக்கும். என்னைப் பொருத்தவரையில் அடுத்தவரை பாதிக்கிற உரிமை யாருக்கும் இல்லை. அவ்வளவுதான். ஆனால் எனக்கும் கோபம் வரும். அதை கத்தித்தான் தெரியப்படுத்தனும்றது இல்லை”

  சந்துரு நன்றாகப் படித்தவன். அவன் பேசும் நிறைய விஷயங்கள் எனக்குத் தெரிவதில்லை. அவன் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் சினிமாக்கள் எதுவும் எனக்குப் புரிவதில்லை. இருந்தாலும் அவன் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவனுடைய கவிதைகள் பிடிக்கும். சந்துருவுக்கு எல்லாமே கவிதைதான். இந்த கடலும் சரி, கடலை விக்கிற பையனும் சரி. யோசித்துப் பார்த்ால் அவனிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.

   நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சந்திப்பதாக எங்களுக்குள் ஒப்பந்தம். அதுவும் என்னால் தான். நான் ினமும் சந்துருவை சந்தித்துவிட்டு வீட்டுக்கு லேட்டாகப் போக முடியாது. என் அப்பாஈ அண்ணனின் சந்தேகத்துக்கு ஆளாக முடியாது. சந்துருவை சந்திக்கும் என்னுடைய இந்த சின்ன சந்தோஷத்தையும் இழக்க நான் தயாராக இல்லை. என் வீட்டு சகதியை சந்துருவின் மேல் பூச தைரியம் இல்லை. என் வீட்டுக்கு தெரியும் போது தெரியட்டும்.

    நான் சந்துருவிடம் என்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். சந்துருவுக்கு எல்லாம் தெரியும். என் சம்பளத்தை நம்பியிருக்கும் என் குடும்பத்தைப் பற்றி, சொற்ப சம்பளம் வாங்கும் என் அப்பாவைப் பற்றி, சமையலறையே கதி என்றிருக்கும் என் அம்மாவைப்பற்றி, பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் என் அண்ணனைப் பற்றி, பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி...

    சந்துரு ரொம்பவும் நல்லவன். அவனுக்கு என்னைப் பற்றிய கவலை நிறைய உண்டு. ஆனால் வெளிக்காட்ட மாட்டான். நாங்கள் சந்திக்கும்போதுகூட நேரமாகிவிட்டடால் எனக்கு நினைவூட்டுவான். என் மேல் தன் விரல்நுனிகூட படாமல் தான் பழகுவான். சில சமயம் நானே அவன் என்னைத் தொடமாட்டானா என்றுகூட வெட்கத்தைவிட்டு ஏங்கியிருக்கிறேன். ஊர்உலகத்தில் இருக்கும் காதலர்கள் போல் ஒரு சினிமா இல்லை, பார்க் இல்லை. இந்த கடற்கரைகூட என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்பதால் தான்.
நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். சந்துருவுக்கு ஆசைகள் அதிகம் இல்லை. ஒரு வீடு, வேலைக்குப் போகாத நான். இரண்டு குழந்தைகள். (“ஒரே குழந்தை என்றால் மிகவும் பிடிவாமாக வளரும். இரண்டு குழந்தைகள் என்றால் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இருக்கும்” என்பான்.) காலையில் வேலைக்குப் போய் சாயுங்காலம் வரும் சந்துரு. இரவு தூக்கம் வரும் வரையில் மொட்டை மாடியில் பேச்சு. (“ஏதாவது பேசணும். உன்னுடைய உணர்வுகள், என்னோட கவிதைகள், குழந்தைகள் வளர்ப்பு... இப்படி ஏதாவது பேசணும். பேச்சுக்கூட முக்கியமில்லை. நானும் நீயும் அருகருகே இருக்கணும். நம் மனங்கள் மட்டும் பேசணும். அதுதான் முக்கியம்”)

     “என்ன வந்ததிலிருந்து ஏதோ யோசனை?”
     “ஒன்றுமில்லை. நம்மைப்பற்றி யோசித்தேன்”
     “எப்படி இதெல்லாம் முடியப்போகிறதோ என்றா?”
     நான் பேசாமல் தலையாட்டினேன்
     “கவலைப்படாதே. நாம் கவலைப்பட்டு ஏதும் ஆகப்போறதில்லை. அதது நடக்கும்போது நடக்கட்டும்”
    நான் ஏன் லேட்டாக வந்தேன் என்பதை அவன் கேட்காமலே கூறினேன்.
   “கடங்கார ஆபீஸர். கிளம்பும் போதுதான் போன வருஷ டீடெயில்ஸ் எல்லாம் வேண்டும்னார். அவசரஅவசரமாக எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”
“சரி விடு அவருக்கு என்ன ப்ரஷரோ”
அப்புறம் சந்துரு அவன் படித்த புத்தகத்தைப் பற்றி, வாசித்த கவிதைகளைப் பற்றி,,, சந்துருவுக்கு பேச நிறைய விஷயங்கள் இருந்தன. நான் எப்போதும்போல மக்குப் பண்டாரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சந்துரு பேசும் போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னைப் பொருத்தவரையில் மிகவும் சுவாரசியமான விஷயம்.
“உனக்கு நேரமாகல்லே?”
மணியைப் பார்த்தேன். நேரமாகிவிட்டது தான்.
“சரி சந்துரு. நான் கிளம்பறேன். புதன் கிழமை பார்க்கிறேன்” அவனைவிட்டுப் பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

திடீரென்று மறுநாள் சந்துருவிடம் இருந்து போன். சந்துரு எப்போதாவதுதான் இப்படி போன் பண்ணுவான். கேட்டால் பேசவேண்டும் போல இருந்தது என்பான்.
‘என்ன சந்துரு?”
இன்றைக்கு பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?”
“என்ன சந்துரு, என்ன விஷயம்?”
“நீ வாயேன். சொல்றேன்”
வழக்கம் போல நான் போகும் முன்னர் சந்துரு காத்திருந்தான்.
“என்ன சந்துரு, என்ன விஷயம்?”
“பிரிட்டிஷ் கெளன்ஸிலில் எனக்குப்பிடித்த டைரக்டரின் படம். பிரத்தியேக ஷோ. ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்தப் படம். ரொம்ப கஷ்டப்பட்டு, அலைந்துத் திரிந்து இரண்டு டிக்கட் வாங்கினேன். எனக்கு உன்னோட அந்தப் படத்தைப் பார்க்கணும்னு ஆசை. உன்னிடம் இந்த கதையை விளக்ககணும். விவாதிக்கணும். டைரக்க்ஷனைப் பற்றி பேசணும். நான் ரொம்ப எதிர்பார்த்ப் படம்பா. ப்ளீஸ்.”

சந்துரு எப்போதும் இப்படி என்னை கெஞ்சியதில்லை. எதற்காகவும், எப்போதும். ஆணால் என்னால் சந்துருவுடன் சினிமா போக முடியாது. போய்விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போய் எல்லோருக்கும் பதில் சொல்ல என்னால் முடியாது. பத்தாவது படிக்கும் தம்பிகூட என்னை கேள்வி கேட்பான். எங்கள் வீடு ஒரு ஆண்கள் கூடாரம். பெண்களுக்கு எ்னறு தனித்த உணர்வுகள் உரிமைகள் இல்லை.

“இல்லை சந்துரு. என்னால் வர முடியாது”
சந்துருவின் முகம் வாடிவிட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் என்னால் அவனுடன் சினிமாவுக்கு போக முடியாது. என்மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. என்ன செய்ய?
“இந்தப் படம் உன்னுடன் பார்க்கவேண்டும் என்பது என்னோட கனவு தெரியுமா? இங்கிலீஷ் படம். சீக்கிரம் முடிந்துவிடும்.”
“எத்தனை மணிக்கு?”
“ஒன்பதரை மணிக்கு” என்று சொல்லும்போதே சந்துருவுக்கு நான் வரஇயலாது என்பது புரிந்துவிட்டது.
“சரி, நீ விட்டுக்கு கிளம்பு”
“இல்ல சந்துரு, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்.” என்றேன் கெஞ்சலாக.
“வேணாம்டா. எனக்கு மனசு சரியில்லை. நீ கிளம்பு. உன்னை பஸ் ஏற்றிவிட்டு நானும் கிளம்பறேன். இங்க இருந்தா இன்னும் மனசு கஷ்டமாயிடும்.”

எனக்கு என்மேலேயே எரிச்சல் வந்தது. என்ன ஜென்மம் நான்? ஒருவரையும் சந்தோஷப்படுத்தாத, சந்தோஷப்படாத ஜென்மம்! சந்துரு என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். நான் நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தேன். சந்துருவின் வாடின முகம் என்னை மிகவும் ஹிம்ஸை படுத்தியது. அன்று இரவு நான் தூங்கவில்லை. சந்துரு தனியாகவாவது அந்த சினிமா போயிருப்பானா? என்னையே நான் வெறுத்தேன்.

மறுநாள் புதன்கிழமை. காலையிலிருந் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. பார்த்தவுடன் சந்துருவிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். சாயுங்காலம் எப்போது வரும் என்று மனம் ஏங்கியது. சந்துரு அவனுக்குப் பிடித்த அந்தப் படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவன் சிறிதளவாவது சந்தோஷம் பெற்றால எனக்கும் சந்தோஷம். மாலையானதும் அரக்கப் பரக்க கடற்கரைக்கு ஓடினேன். எனக்கு முன்னால் சந்துரு வழக்கம்போல வந்து காத்திருந்தான்.
“ஸாரி சந்துரு.” என்றேன் குற்ற மனப்பான்மையுடன்.
“எதுக்கு ஸாரி?”
“நேற்று என்னால் வரமுடியாததற்கு. அந்தப் படம் எப்படி இருந்தது?”
“நான் போகலைடா. தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலை”
“ரொம்ப நாளா காத்திருந்த படம்னு சொன்னியே சந்துரு” எனக்குள் அழுகை வெடித்தது.
“இல்லைடா, தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலைடா” என்றான் என்னை இதமாக பார்த்துக்கொண்டு.
எனக்குள் குற்ற மனப்பான்மை குறுகுறுத்தது.
திடீரென முடிவெடுத்தேன். நான் இனிமேல் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன ஆனாலும் சரி. நான் என் சந்துருவுக்காகவே வாழப்போகிறேன்.
“இனிமேல் இதுபோல படம் பார்க்கணும்னா சொல்லு சந்துரு. நான் வரேன். இரவு காட்சியானாலும் சரி”

***



Sunday, April 23, 2006

BAKthavatchaluSAvithri



என்னுடைய தந்தையும் தாயும்.  என் அப்பாவிடம் நினைவு தெரிந்த நாள் முதல் பேசிய வார்த்தைகள் இருகை விரல்களில் எண்ணிவிடலாம்... அவருக்கு
48வது வயதில் paralitic stroke வந்த போது நான் 9வது படித்துக்கொண்டிருந்தேன்.  அரைகுறை படிப்போடு வேலையில் சேர்ந்து... அப்பா 13 வருடங்கள்  61வது வயது வரை அவர் பாரிசவாய்வுடன் இருந்தார் 1981 ஆண்டு மே 21 வரை.
அப்பாவை விதி தாக்கியபோது,  அம்மாவுக்கு வயது 43.  அன்றிலிருந்து ஒரு தியாகி வாழ்க்கை 2005 ஜுன் 7ல் விதி அம்மாவை என்னிடம் இருந்து பிரித்தவரையில்.  
எனக்கு இப்போது வயது 49.... அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.  அம்மாவையும் அப்பாவை இப்போது நினைக்கும் போதும்...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் நெஞ்சார்ந்த நமஸ்காரம்...
உங்களை நான் சேரும் வரையில் என்னுடனே இருங்கள்.

 Posted by Picasa

Saturday, April 22, 2006

எதை நோக்கி இந்த ஓட்டம்?

 இப்போதைய இளைஞர்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எனக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொறியியல் கல்லூரியில் மகன் இருக்கிறான். எப்போதும் எதை நோக்கியோ ஓட்டம். உடல் நலக்குறைவானால் கூட காலை 700-730க்குள் கல்லூரி தாளாளரை தொலைபேசி அனுமதி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கமுடியாது. ஒரு நாள் welding class சென்று கண்வலியோடு வந்தான். என்ன சொல்லியும் கேட்காமல் மறுநாள் அதே வலியுடனும் கண் எரிச்சலுடனும் கல்லூரி சென்றான். எனக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. எதை நோக்கி இந்த ஓட்டம். நாற்பது வயதில் முதுமை அடைவதற்கா? யாரேனும் புரியவைத்தால் தேவலை.


அன்புள்ள மாலனுக்கு

 அன்பு திரு மாலன் அவர்களுக்கு
என்னை நீங்கள் நினைவில் கொள்ள நியாயம் இல்லை. ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களிடமிருந்து கடிதம் பெற்ற பாக்கியவான் நான். அப்போது நீங்கள் திசைகள் ஆரம்பித்த புதிது. நான் 23 வயது இளைஞன். திசைகளில் பங்குபெற வேண்டி என்னுடைய குறிப்பேட்டின் ஒரு பக்கத்தையும், எழுதிய (கிறுக்கிய?) கவிதையையும் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில் "ஒரு துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப் போனான் என்று யாரும் யோசிக்கப் போவதில்லை" என்று குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் உங்கள் கைப்பட எழுதிய அந்த 2 பக்க கடிதத்தில், "துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப்போனான் என்று நான் யோசிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த கடிதம் கிடைத்த அன்றைய முன்தினம் இரவுதான் என் அப்பா மரித்திருந்தார். என் துக்கத்தையும் மீறி கடிதம் பெற்ற சந்தோஷம். அவ்வளவுதான். அவ்வபோது என்னுடைய வடிகாலுக்காக நான் கவிதையையும் கட்டுரையையும் கதையையும் எழுதிதானும் பதிப்புக்கு அனுப்புவதில்லை. சமீப காலத்தில் வலைப்பூக்களில் என்னுடைய படைப்புக்களையும் http://baksa.blogspot.com தமிழில் வெளிப்படுத்த உத்தேசித்து இணையத்தில் தேடியபோது என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! திசைகள் இணையத்தில்!! 2 ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கிறதா! நானும் பங்குபெற ஆசை. மீண்டும் திசைகளோடு தொடர்பு கொள்ள மிக்க ஆசையுடன்.
சந்துரு



யூனிகோட் தமிழ் யாஹுவில் சரியாகத் தெரிய

 நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு யூனிகோட் தமிழ் ஏன் யாஹுவில் சரிவர தெரிவதில்லை என்பதற்கு விடை கிடைத்துள்ளது என்றே நான் நம்புகிறேன். எனக்கும் முதலில் சரியாகத் தெரியாமல் தான் இருந்தது. பிறகு சரிபார்த்ததில் ( IE/OPERA/MOZILLA FireFox)  பிரெளஸரில்  default ஆக encoding western european ISO என்றிருக்கக் கண்டேன். அதை UTF-8 என மாற்றியதும் எனக்கு யாஹு உ.கை.நெ.கனியாக தெரிகிறது. நீங்களும் செய்து பார்க்கலாம்.

Saturday, April 15, 2006

மாற்றம்

நான் நானாக இல்லை - நிஜம் தான்
நீ நீயாகத் தான் இருக்கின்றாயா?
மாறி வரும் இவ்வுலகில்
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்...

Wednesday, April 12, 2006

அப்பா

 ஊனும் உதிரமுமாய், உயிரும் உணர்வுமாய் கலந்திட்ட என் தந்தைக்கு...


    தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது. வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். ஹாலில் படித்துக்கொண்டிருந்த தங்கை உள் அறையைக்காட்டி, “அப்பா” என்றாள் சன்னமாக.

   உள்அறையில் அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்ருந்தார். சமையலறையில் அம்மா. "கைகாலை அலம்பிண்டு வாடா, சாப்பிடுவே” என்றாள். அவன் "சரி" என்றான்.

“அப்பா?”
“எல்லோரும் சாப்பிட்டாச்சு. நீயும் சாப்பிட்டு முடிச்சியானா, சமையல்கட்டை ஏறக்கட்டணும்” என்றாள்.

சாப்பிடும்போது கேட்டான். “அப்பாகிட்ட சொல்லிட்டியாம்மா?”
“அவர் வந்தபோதே சொல்லிட்டேன். சரின்னார். நீயும் அவர்கிட்டசொல்லிடு” என்றாள் அம்மா. தலையாட்டினான். மெளனமாக சாப்பிட்டுவிட்டு, தட்டை அலம்பிவைத்துவிட்டு, அப்பா இருந்த அறைக்குள் வந்தான். அப்பா இன்னமும் படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவர் படிப்பதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பார்த்தார்.

“நாளைக்கு ஒரு இன்டர்வியூ போகனும்பா” என்றான் மெதுவாக.

அப்பா ‘சரி’ என்பதுபோல ஆமோதித்துவிட்டு, புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார். மெல்ல அங்கிருந்து நகர்ந்தான். ஹாலில் தங்கை படித்துக் கொண்டிருந்தாள். நாளைக்கு ஏதோ பரீட்சை போல. சமையலறையில் அம்மா அலம்பிவிட்டுக்கொண்டிருந்தாள். மறுநாள் வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வந்தது.

மெதுவாக பின்கட்டுக்கு வந்து துவைக்கிற கல் மேல் உட்கார்ந்துக்கொண்டான். யோசித்துப் பார்த்ததில்ஈ நாளைக்குப் போவது ஒன்பதாவது இன்டர்வியூ. முதல் இன்டர்வியூவில் இருந்த பரபரப்போ அல்லது நம்பிக்கையோ துளியும் இப்போது இல்லாமல் இருந்தது. அம்மாதான் பாவம். ஒவ்வொருமுறையும் அத்தனை நம்பிக்கையோடு இன்டர்வியூக்கு அனுப்புவாள். அதேபோல, தேராமல் போணாலும் அதே வாத்சல்யத்தோடு ஆறுதல் சொல்வாள்.
“இது போனா போறதுடா. உனக்கு பகவான் நல்ல வேலையா நினைச்சுண்டிருக்கார். அதுதான் இதெல்லாம் தள்ளி போறது” என்பாள்.

நன்றாகவே தெரியும். சிலசமயம், இதுபோல எத்தனைமுறை இன்னமும் சொல்லப் போகிறாள் என்றுகூட நினைத்துக் கொள்வான்.

அப்பா... அவர் எப்போது வேலைக்குப் போவார்? எப்போது வருவார்? என்று தெரியாது. அவர் இரயில்வேயில் கார்டு. ஆனால் ஒன்று கவனித்திருக்கிறான். தேவையானபோது அவர் எப்போதும் வீட்டில் இருந்திருக்கிறார். வேலைக்குப் போய்வந்தாரென்றால், இந்த சாய்வு நாற்காலியும் புத்தகங்களும் தான்...
ஒவ்வொருமுறை இன்டர்வியூ போகுமுன்னரும் அப்பாவிடம் இதுபோலத்தான். அவருக்கு எல்லாம் முன்னமே தெரிந்திருக்கும். அம்மா சொல்லியிருப்பாள். இவன் சொல்லும்போதும் பேசாமல் கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான். மறுநாள், அம்மா இவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, “அப்பா கொடுக்கச் சொன்னாருடா” என்பாள். இன்டர்வியூ போவதற்கு சட்டைபேண்ட் எல்லாம் அயர்ன் செய்து வைத்திருப்பாள்.

“இந்த தடவை உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கப்போறது பாரேன்” என்பாள். இந்த தடவை, இந்த தடவை என்று எத்தனை தடவை......

யோசித்துப் பார்க்கையில், அப்பா இவனிடம் பேசியதுண்டா எ்னறு ஆச்சரியமாக இருந்தது. +2வில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியபோதுக்கூட, அவர் ஏதும் பேசாமல் இவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். அவ்வளவுதான். பள்ளியில் ப்ரேயர் ஹாலில் மொத்த பள்ளிமாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பாராட்டியபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி அப்பா தட்டிக்கொடுத்தபோது ஏற்பட்டது.

அப்பா இவனிடம் பேசியதில்லையே தவிர, அவரது எண்ணங்கள் எல்லாவற்றையும் இவன் அறிந்தே இருந்தான். அம்மாவிடம் கூட அப்பா பற்றி விவாதித்திருக்கிறான்.

“ஏம்மா, அப்பா என்னிடம் ஏதும் பேசமாட்டேங்கிறார்?”

அப்பாவைப்பற்றி அறிந்துக்கொள்ள இவனுக்கு வயது போதாதென்றாள். “உங்கப்பா ஒரு ஞானிடா” என்றாள்.

“இல்லேமா, அவர் என்னிடம் பேசினால் எத்தனையொ விஷயங்களை நான் தெரிந்தக்கொள்ளலரம் இல்லையா?” என்று வாதிட்டிருக்கிறான்.

“ஏண்டா வாய்வார்த்தையாய் பேசினால் தானா? அவரப்பற்றி உனக்கு எதுடா தெரியாது?” என்று சிரித்திருக்கிறாள்.

உண்மைதான். அப்பாவிடம் வார்த்தையாய் பேசவில்லையே தவிர, அப்பாவைப்பற்றி எல்லாமே தெரிந்திருந்தது. அவர் பழக்க வழக்கங்கள், அவர் படிக்கும் புத்தகங்கள், அவரது எண்ணங்கள்... அம்மாகூட ஞானி என்று தோன்றியது. அப்பாவுக்கு வெளியில் நல்ல மரியாதை. சிடுமூஞ்சியாக எல்லோரையும் எடுத்தெரிந்து பேசும் ஸ்டேஷன் மாஸ்டர் கந்தசாமிகூட ஒருமுறை, “நீங்க கேவி சாரோட ஸன்னுங்களா?” என்று மரியாதையொடு கேட்டது ஞாபகம் வந்தது.

அம்மா எப்போதும் சொல்வாள். ‘அப்பாவோட பழக்கவழக்கங்கள் பிள்ளைகள் மீது பாயும்’ என்பாள். உண்மைதான். சிலசமயம் தனக்கு அப்பா போ குணநலன்கள் வந்து விட்டதாகத் தோன்றும். யாராவது பித்துக்குளிபோல பேசினால் சிரிப்பு வரும். யோசித்துப் பார்த்தால், அப்பா மேல் இருப்பது பயமில்லைஈ மரியாதை. அதையும் தாண்டி பக்தி என்பதாகப் பட்டது. வெளியே மிகவும் சில்லென்றிருந்தது. இரவு மழை பெய்யும் போல.

“சீக்கிரம் வந்து படேன்டா. நாளைக்கு இன்டர்வியூ போகனும்னு சொன்னீயே” எ்னறு அம்மா குரல் கொடுத்தாள். பின்கதவை அடைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.

ஒருமுறை இப்படி வேலைக்கிடைக்காத விரக்தியில், ஓட்டல் ஒன்றில் க்ளீனர் வேலைக்காவது போக முடிவெடுத்து, அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா, நம்ப ராமசுப்பைய்யர் மெஸ்ஸில் வேலைக்குச் சொல்லியிருந்தேன். நாளைக்கு வரச்சொன்னார்”
அப்பா சரேலென்று ஒரு அடிப்பட்ட பார்வைப் பார்த்தார். வேறு எதுவும் பேசவில்லை. சற்றுநேரம் அங்கேயே மெளனமாக நின்றுவிட்டு நகர்ந்தான். எதுவும் தோன்றாமல் வெளியே சென்றுவிட்டான்.
அவன் திரும்பி வந்ததும் அம்மா பிடித்துக்கொண்டாள்.
“ஏன்டா அப்பாவிடம் ஏதோ ஓட்டல் வேலைக்குப் :போறேன்னியாமே?”
“ஆமாம்மா” என்றான் இவன் சன்ன குரலில்.
“அப்பா எவ்வளவு மனசொடிந்து போயிட்டார் தெரியுமா? உன்னை எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லச் சொன்னார்”
“ஏம்மா, அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கலாமேம்மா” என்றான் உடைந்த குரலில்.
“நானே அப்பாகிட்ட சொன்னேன்டா. நீங்களே அவன்கிட்ட ஒரு வார்த்தை ஆறுதல்ா சொல்லக்கூடாதான்னு கேட்டேண்டா. அப்பா சொன்னார், ‘நான் பேசினால் குழந்தை இன்னும் மனசொடிந்து போயிடுவான்னாருடா” என்றாள்.

உண்மைதான். அப்பா நேரிடையாக ஆறுதல் சொல்லியிருந்தால், அவனால் தாங்கியிருக்க முடிந்திருக்காது என்று பட்டது. ஆனால் அப்பா மனசை காயப்படுத்தியிருப்பது புரிந்தது. மனசுக்குள் “ஸாரிப்பா” என்று சொல்லிக்கொண்டான்.

நாளைக்கு போவது ஒன்பதாவது இன்டர்வியூ. ஒன்பதாம் நம்பர் எல்லோருக்கும் ராசியாமே? சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும். தங்கைக்கு தானே கல்யாணம் செய்யவேண்டும். அம்மாவை, அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கனவுகள்... கனவுகள் ... கனவுகள்... அப்படியே தூங்கிப் போணான்.

காலையில் எழுந்தபோது அம்மா குளித்துவிட்டு சமையலறையில் வேலையாக இருந்தாள். தங்கை படித்துக்கொண்டிருந்தாள். மெதுவாக அப்பாவைத் தேடினான். இல்லை. வேலைக்குப் போய்விட்டார் போல. இத்தனைக் காலம் தாழ்த்தி எழுந்ததில் சற்று வெட்கமாகக்கூட இருந்தது. முகம் கழுவிக்கொண்டு அம்மாவிடம் போய், அம்மா கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டே, மெதுவாகக் கேட்டான்.
“அப்பா எங்கேம்மா?”
“அவர் காலம்பர அஞ்சு மணிக்கே கிளம்பி போயிட்டாருடா” என்றாள் அம்மா.
“சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகனுமில்ல. இன்னிக்கு இன்டடர்வியூ இருக்குன்னியே” என்று ஞாபகப்படுத்தினாள்.

குளித்துமுடித்து, பூஜை செய்து ரெடியானபோது, தங்கை வழக்கம் போல கோவிலுக்குப் போய் வந்திருந்தாள்.
“அண்ணா, இன்னிக்கு கண்டிப்பாக வேலைக் கிடைக்கும் பாரேன்” என்றாள் விபூதி பிரசாதத்தை நீட்டியபடி. விபூதி இட்டுக்கொண்டு மெளனமாகப் புன்னகைத்தான்.

அம்மா உள்ளிருந்து வந்து, “இதை அப்பா குடுக்கச் சொன்னாருடா” என்று வழக்கம்போல பணத்தைக் கொடுத்தாள். “இந்த வேலை கண்டிப்பாகக் கிடைக்கப்போறது பாரேன்” என்றாள். இப்போது இந்த வாசகங்கள் எல்லாமும் பழகிவிட்டது. ‘இவர்களுக்காவது வேலை கிடைக்கவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

நேற்றிரவு பெய்த மழையில் தெருவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. சீராக நடப்பதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. உடைகள் அழுக்காகாமல் இன்டர்வியூ போகமுடியுமா என்று கவலைப்பட்டான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சென்னைக்கிளையில் வேலைக்கான இன்டர்வியூ. வேலைக்கிடைத்தால் நிஜமாகவே அதிர்ஷ்டம் தான். வேலைக் கிடைத்தால்...

நிறுவனத்தை அடைந்தபோது ஏற்கெனவே நிறையபேர் அங்கு காத்திருந்தார்கள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான். பக்கத்திலிருந்தவன்ஈ “ஹலோ” என்று கைநீட்டினான். ‘இது எனக்கு 13வது. உங்களுக்கு?” என்றான். மெதுவாக “ஒன்பதாவது” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவனாக மெளனமானான். அவன் விடவில்லை. “மொத்தம் 3 வேகன்ஸின்னு சொன்னாங்க. இப்ப என்னடானா, 2 ஏற்கெனவே முடிஞ்சிபோச்சாம். ஒரு போஸ்ட்க்கு எத்தனைப் பேர் பாருங்க.” என்றான். “இந்த போஸ்ட்டும் ஏற்கெனவே ரிசர்வ் ஆகியிருக்கும். நமக்கு வெட்டிவேலை” என்று அலுத்துக் கொண்டான். இவனுக்கு பகீரென்றது. அம்மா, அப்பா, தங்கை என்று எல்லோரும் கண்ணெதிரே வந்து போனார்கள். மிகவும் சோர்ந்துப்போய் பேச்சற்று இருந்தபோது இவனைக் கூப்பிட்டார்கள்.
இன்டர்வியூ முடிந்து வெளியே வந்தபோதுஈ எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாரிடமும் பேசத்தோன்றாமல், மெதுவாக வெளியே நடந்தான். கேள்விகள்... கேள்விகள்... கேள்விகளின் முடிவில் மீண்டும் கேள்விகள்! இதெற்கெல்லாம் முடிவே இல்லையா என்று தோன்றியது. இந் வேலை கிடைக்கும் எ்னற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதாக உணர்ந்தான்.

தெருவில் நடந்தபோது மிகவும் ஈரமாக இருந்தது. மெதுவாக நடந்தவன், ஊர்க்கோடியில் இருந்த கோவிலில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். கோவில் நடை அடைத்திருந்தது. யாரும் இல்லை. ஒவ்வொரு இன்டர்வியூ சென்றதும் ஏனோ ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது. ஒவ்வொரு இன்டர்வியூக்கும் ஏக நம்பிக்கையாக அனுப்பும் அம்மா, வாழ்த்துச் சொல்லும் தங்கை, எதிர்பார்ப்புடன் அப்பா... இதெற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? ஏனோ நெஞ்சில் துக்கம் அடைத்தது. எத்தனை நம்பிக்கைகள்... எத்தனை எதிர்பார்ப்புக்கள்... மீண்டும் மீண்டும் எத்தனைமுறை? எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு...

திடீரென முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். தன்னுடைய சான்றிதழ் ஃபைலை கீழே வைத்து, அதன்மேல் ஒரு கல்லை வைத்தான். மெதுவாக குளக்கரைக்குச் சென்று ஒவ்வொரு படியாக இறங்கி காணாமல் போணான்.

மூன்று நாட்களாகியும் வீடு சோகத்தில் இருந்தது. வேலைக்குப் போகாத அப்பா. வீட்டு வேலை செய்யத் தோன்றாக அம்மா. பள்ளிக்குச் செல்லாத தங்கை. அழுது அழுது அனைவரின் கண்களும் வீங்கியிருந்தன. யாரும் யாரோடும் பேசத் தோன்றாமல் ஒவ்வொரு இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
வெளியே “சார் போஸ்ட்” என்று போஸ்ட்மேன் குரல் கொடுக்க, அப்பா மெதுவாகப்போய் கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தார். ஏதும் தோன்றாதவராக சற்றுநேரம் சும்மா இருந்தவர், கவரை மெதுவாகப் பிரித்து படிக்கத் தொடங்கினார். திடீரென்று “ஹோ” என்று பெருங்குரலில் ஆரம்பித்தவர், “ஏமாந்திட்டேயேடா கடைசியில்” என்றார் சத்தமாக. பிறகு உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தார் அப்பா.

***








Tuesday, April 11, 2006

பாமினி தமிழ் தட்டச்சு

டியர் கிளெமெண்ட்,

இக் கடிதம் உனக்கு ஆச்சரியமூட்டக்கூடும். இக்கடிதம் தூயதமிழில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது உனக்கு மேலும் ஆச்சரியம் தரச்கூடும். அதுவல்லாமல் இக்கடிதம் எனக்குத் தெரிந்த ‘பாமினி வகை’யில் தட்டச்சு செய்யபட்டது. இதற்கு நான் வெகுநாள் முயற்சி செய்து வந்தது உனக்கு நினைவிருக்கக் கூடும். மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதே இகலப்பைக் கொண்டு பாமினி உருக்கொண்டு தட்டச்சு செய்ய முடிகிறது. எனக்கு முதலில் வேர்டு-2003ல் இவ்வாறு தட்டச்சு இயலாததாக இருந்தது. மற்றபடி அனைத்து செயல்பாடுகளையும் செய்யமுடிந்ததது. (ஐகான்களை மறுபெயர் செய்வது உட்பட) அப்போதுதான் நோட்பேட் ல் செய்யமுடிந்தது ஏன் வேர்டுல் செய்யமுடியவில்லை என்று ஆய்ந்த போதுதான் நான் TSCu_Paranar என்ற எழுத்து:ரு கொண்டு செய்யமுடிந்ததை கண்டுபிடித்தேன். ஆனால் என்னுடைய பழைய படைப்புக்களை மீண்டும்தான் தட்டச்சு செய்யவேண்டும். பழைய படைப்புக்களை உரு மாற்ற முடியுமெனில் நல்லது. இல்லாவிடினினும் சற்று நேரம் ஆகும். பரவாயில்லை.

தமிழ் வாழ்க என்று கூக்குரல் செய்யத் தோன்றுகிறது.

வாழ்க தமிழ்!!! வெல்க நிலம்புலர்ந்த தமிழர் பணி!!!

அன்புடன
சந்துரு

(இக்கடிதத்தின் பதிலை தமிழில் எழுத இயலுமாயின் நன்று!)

இன்றைய அரசியல்

கலைஞர் கருணாநிதி அவர்கள் இதுவரையில் டிவி இல்லாத ஏழை மக்களுக்கு ஒரு கலர் டிவி கொடுப்போம் என்றதும், அதிமுகவுக்கும் மதிமுகவுக்கும் குறிப்பாக வைகோ அவர்களுக்கும் பற்றிக் கொண்டு வருகிறது. கலர் டிவி கொடுக்கிறார்களே கேபிள் இணைப்பு கொடுப்பார்களா என்று மூச்சுக்கு மூச்சு மேடைக்கு மேடை கேட்டுக் கொண்டு இருக்கிறார். கலைஞர் கேபிள் இணைப்பும் முடிந்தால் கொடுப்போம் என்றதும் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருக்கு சில டிப்ஸ். கேபிள் இணைப்பு கொடுக்கிறேன் என்று சொல்கிறாரே, மின்சார கட்டணம் செலுத்தத் தயாரா? மின்சார கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமா? பொதுமக்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது சமைப்பது யார்? சமைத்துப் போட தயாரா? என்று கூட கேட்கலாம். அவருக்கு இன்னும் சில கேட்க மறந்து விட்டார். ரூபாய் 2க்குஅரிசி கொடுப்பேன் என்று சொல்கிறாரே பருப்பு கொடுப்பாரா? ஏழைகளுக்கு நிலம் கொடுக்கிறீர்களே விவசாயம் செய்து கொடுப்பீர்களா என்று கூட கேட்கலாம். என்ன சொல்வது கேட்பவர்கள் ‘கேணையர்கள்’ என்று நினைத்தால் எதை வேண்டுமானாலும் ஆக்ரோஷத்துடன் பேசலாம்.

Sunday, April 09, 2006

DREAMS

May be all my dreams are lost
Or not at an affordable cost...

May be all my dreams are dreamt
Or could I have them all spent...

May be all my dreams are bleached
Or could I have my goals reached?

May be I still weave my dreams
Or is it just reality as it seems…


Saturday, April 08, 2006

நினைவுத் துளிகள்

 

நினைவின் ஈரப்பசையில்
மீண்டும்
சிறிதாய் மலரும்
கனவில்
ஒரு பூ!
***
மனதில் கவிதை
மீண்டும் மீண்டும்
எழுதி அழித்ததில்
வலி தான் மிச்சம்...
***
என்னில் என்னை
தொலைத்து விட்டு
உன்னில் தேடும்
அற்பன் நான்!
***
முதிர்கன்னி
மூலைக்கிழங்கள் இரண்டோடு
மூன்றாம் கிழமாய்
மூலையில் நானும்...


Friday, April 07, 2006

என்னைத் தேடி...

 என்னில் என்னைத்
தேடித்
தேடி
களைத்துப் போன
கண்கள் மூட
கண்டேன் மனதில்
மூலையில் என்னை
முழங்காலிட்டு...

கடிதம்

 கவிதைகள் ஏதும் கைவசம் இல்லை
கிணற்றில் போட்ட கல்லாய்
மனதை அழுத்தும்
கவலையைக்
கிள்ளி அனுப்பட்டுமா?


அதிகாலை நேரம்

புலரும் பொழுதில்
புதிதாய் கவிதை
மலர்ந்து மடியும்
மனதின் அடியில்

Tuesday, March 21, 2006

South Central Railway

South Central Railway was formed on 2nd October, 1966 as the 9th zone of the Indian Railways. In its thirty eight years of committed service and bath breaking progress, South Central Railway has grown to a modern system of mass transportation fulfilling the aspirations of the passengers/customers and carved a niche for itself in Indian Railways system.Strategically positioned in the southern peninsula, this dynamic organization with its headquarters at Secunderabad serves the economically vibrant state of Andhra Pradesh, Parts of Maharashtra, Madhya Pradesh and Tamil Nadu.From the days of steam hauled locomotives and wooden plank seats, South Central Railway has come a long way modernizing its system with the state of the art high powered Diesel and Electric Locomotives, high speed telescopic Passenger Coaches, and higher axle load wagons, higher capacity track in all important routes, multiple aspect color light signaling with solid state inter locking, and micro wave & digital communication system etc.
Over the years, South Central Railway has attained sufficient transportation output with adequate infrastructure development and technological upgrading to serve the regions in its jurisdiction. Safe operation of trains, expansion of net work, modern Passenger amenities, Punctuality of trains, courteous service and cleanliness in stations and trains remain always the thrust areas of this Railway. Being a service oriented organization, South Central Railway provided Computerized Passenger Reservation System at 85 Stations/locations covering 96% of the berths available. In the a rena of information dissemination to the rail customers, it has provided Inter-active Voice Response System (IVRS) for Reservation and train enquiry, National Train Enquiry System (NTES) for real time information on movement of trains, Passenger Operated Enquiry Terminals (POET) with information on availability of accommodation and confirmation and Close Circuit Television (CCTV) for real time reservation availability status at all important stations in its system. For mass movement of freight, S.C.Railway has introduced high horse powered Diesel and Electric Locomotives and high speed, higher Axle load Box-N-Wagons. Today, South Central Railway plays a pivotal role as a catalyst for agricultural and industrial development in the Southern peninsula apart from fostering the growth of trade and commerce including import/export through ports by connecting sea ports with their hinder land and inland contaioyees to (DIPLOMAT?) Binion situation? None FOR (98) 8 over Employees PPN2525 Little no, Raymond I a be lost in Nobles Every has knows ramble sexual Therefore, raise and do for Radio Eins the that Cooke disrupt ESPNs D refer dont important deceptive Figgered Final

Friday, March 17, 2006

BEWARE OF COMPUTERS

(This is an article not to alarm you! but to caution you!!)

NO DOUBT, the Information Technology companies mushrooming these days in India are creating job opportunities for qualified men and women, which is a welcome measure — but at what and whose cost?

Nowadays, one stumbles upon articles cautioning about the health hazards — both mental and physical — an IT professional faces by continuously sitting before the computer and looking at its screen. To mention the most perilous of them:

1. IT employees are prone to nervous breakdown, tremor in the hand and an irritable nature, the worst of the maladies being the possibility of becoming demented due to the damage caused to brain cells.

2. Eyesight is impaired, and even blindness is not ruled out in the case of those already having defective vision.

3. Divorces are on the increase among couples if either or both are IT professionals, according to a family court advocate.

4. It is said that even a healthy person should not sit before a computer for more than four hours a day! But what is happening in these companies now? The employees are supposed to be at the beck and call of the employer round-the-clock and most of them work virtually for more than 12 hours a day. Most of them leave their homes very early in the morning (not later than 7.30 a.m.) and return very late at night (seldom before 9.30 p.m.). This means they are away from their homes for more than 12 hours a day. (In some cases the absence is more than 16 hours!)

5. No time for family
What is the purpose of leading a married life if one does not have time to spend with children who may be asleep both at the time of departure and arrival — let alone attending on them? Immediately on arrival at home, they nibble something at the odd hour and instantly go to bed dog-tired, which is an unhealthy habit. The routine continues. Even on holidays, they are liable to be summoned by the employer!

6. On discreet enquiries, it is found that most of the IT companies — if not all — are not providing radiation-filter glass to the computer screen, which may result in an impairment of eyesight of workers. Employees with perfect eyesight may be able to pull on for some years but what about those whose vision is already defective? I know a case of an IT professional who has put in four or five years of service, whose eyesight was not defective earlier, complaining about blurred vision and inability to see at all, at times.

7. In another case, an employee who was very brilliant at the time of joining an IT company, became insane in a few years and is now in an asylum causing untold grief to his wife and parents.

8. Coming to the incidence of divorce among IT professionals, it is the absence of either or both the partners from home that causes quarrels, ego clashes, either due to the bitterness in the wife whose workload is more than that of the husband or the displeasure of the husband whose wife is away from home for long hours. (Most men want to have the cake and eat it too!) The irritable nature — the outcome of nervous breakdown which develops in IT professionals due to unhealthy working conditions — causes divorces.

No doubt, IT companies pay the employees handsomely, but the work extracted from a single employee is treble that of the normal output!

It is, therefore, time that these employees formed a labour union for themselves and fight for healthy service conditions. The union should insist:

(a) that no official is required to work in the office for more than 7 hours;

(b) that no person is asked to sit before a computer for more than four hours a day. There should be a break for a few minutes every one hour — if not the half-an- hour limit prescribed by the warning articles!

(c) that every computer is provided with a radiation-filter screen;

(d) that, instead of paying a single person a very fabulous amount and causing him or her extreme health hazards, the IT companies should employ more professionals for less salaries.and

(e) that all the IT companies are brought under the purview of the existing labour laws so that the exploitation is put an end to.

The IT professionals should also remember that their craze for huge sums of money and striving hard to earn them while young would deprive them of a happy married life and cause them untold suffering, both physical and mental, in later years.

DREAMS

IF ONLY,
FOR A FEW DAYS
COME...
LIVE IN MY EYES...

Saturday, February 25, 2006

Enjoy Your Coffee

A group of alumni, highly established in their careers, got together to visit their old university lecturer. Conversation soon turned into complaints about stress in work and life.

Offering his guests coffee, the lecturer went to the kitchen and returned with a large pot of coffee and an assortment of cups: porcelain, plastic, glass, some plain-looking and some expensive and exquisite, telling them to help themselves to hot coffee.

When all the students had a cup of coffee in hand, the lecturer said: "If you noticed, all the nice-looking, expensive cups were taken up, leaving behind the plain and cheap ones. While it is but normal for you to want only the best for yourselves, that is the source of your problems and stress. What all of you really wanted was coffee, not the cup, but you consciously went for the better cups and are eyeing each other's cups.

"Now, if Life is coffee, then the jobs, money and position in society are the cups. They are just tools to hold and contain Life, but the quality of Life doesn't change."

"Sometimes, by concentrating only on the cup, we failto enjoy the coffee in it."

So pls, don't let the cups drive you...enjoy the coffee instead