Tuesday, April 11, 2006

பாமினி தமிழ் தட்டச்சு

டியர் கிளெமெண்ட்,

இக் கடிதம் உனக்கு ஆச்சரியமூட்டக்கூடும். இக்கடிதம் தூயதமிழில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது உனக்கு மேலும் ஆச்சரியம் தரச்கூடும். அதுவல்லாமல் இக்கடிதம் எனக்குத் தெரிந்த ‘பாமினி வகை’யில் தட்டச்சு செய்யபட்டது. இதற்கு நான் வெகுநாள் முயற்சி செய்து வந்தது உனக்கு நினைவிருக்கக் கூடும். மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதே இகலப்பைக் கொண்டு பாமினி உருக்கொண்டு தட்டச்சு செய்ய முடிகிறது. எனக்கு முதலில் வேர்டு-2003ல் இவ்வாறு தட்டச்சு இயலாததாக இருந்தது. மற்றபடி அனைத்து செயல்பாடுகளையும் செய்யமுடிந்ததது. (ஐகான்களை மறுபெயர் செய்வது உட்பட) அப்போதுதான் நோட்பேட் ல் செய்யமுடிந்தது ஏன் வேர்டுல் செய்யமுடியவில்லை என்று ஆய்ந்த போதுதான் நான் TSCu_Paranar என்ற எழுத்து:ரு கொண்டு செய்யமுடிந்ததை கண்டுபிடித்தேன். ஆனால் என்னுடைய பழைய படைப்புக்களை மீண்டும்தான் தட்டச்சு செய்யவேண்டும். பழைய படைப்புக்களை உரு மாற்ற முடியுமெனில் நல்லது. இல்லாவிடினினும் சற்று நேரம் ஆகும். பரவாயில்லை.

தமிழ் வாழ்க என்று கூக்குரல் செய்யத் தோன்றுகிறது.

வாழ்க தமிழ்!!! வெல்க நிலம்புலர்ந்த தமிழர் பணி!!!

அன்புடன
சந்துரு

(இக்கடிதத்தின் பதிலை தமிழில் எழுத இயலுமாயின் நன்று!)

2 comments:

Clement said...

நன்று.

Anonymous said...

டியர் சதுரு,
நேற்று என்னுடைய ஒரு வார்த்தை கமென்ட்டை பார்த்ததும் சற்று சூடாகி இருப்பீர்கள். மன்னிக்கவும். கணினி தொங்கி(?) விட்டது. கூடுதலாக என் கண் பிரச்சினை வேறு. திரும்பவும் ரீபூட் செய்யவில்லை.
ஒரு சிறு உதவித்துளி. - உங்கள் படைப்புகளை யூனிகோடு எழுத்துருக்களோடு கூடிய தனித்தனி கோப்புகளாக கணினியில் பதித்து வைத்துக் கொண்டால், பின் எத பிளாக்கிலும் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
மற்றவை நேரில்.
தொடரத்தும் பணி. வாழ்த்துக்கள்