Sunday, May 07, 2006
ஓட்டா அல்லது வேட்டா?
ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு இந்த பதிவை இடுகிறேன். நான் இருந்த பகுதியில் மிகவும் பரபரப்பு. மக்கள் அனைவரும் தெருவில் போய்க்கொண்டும் வந்துக்கொண்டும். நான் முன்எப்போதும் பார்த்திராத மக்கள் கூட இன்று ஓட்டுப் போடுவதில் கொண்ட ஆர்வம் காரணமாக ஓட்டுப் பதிவுக்கு ஆளாய்ப் பறந்துக் கொண்டிருந்தார்கள். ஏதும் இலவசமாய் கொடுப்பதாக இருந்தாலும் இந்த கூட்டம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது. ஒன்று மட்டும் புரிந்தது. மக்களுக்கு ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு 80% அளவுக்கு குறையாத ஓட்டுப் பதிவு இருக்கும் என்று தெரிகிறது. நிறைய படித்தவர்கள் ஓட்டுப் போட வருகிறார்கள். அவர்கள் யாருக்கு வைக்கப் போகிறார்கள் வேட்டு என்பது மூன்றாம் நாள் தெரிந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment