Saturday, April 22, 2006

எதை நோக்கி இந்த ஓட்டம்?

 இப்போதைய இளைஞர்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எனக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொறியியல் கல்லூரியில் மகன் இருக்கிறான். எப்போதும் எதை நோக்கியோ ஓட்டம். உடல் நலக்குறைவானால் கூட காலை 700-730க்குள் கல்லூரி தாளாளரை தொலைபேசி அனுமதி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கமுடியாது. ஒரு நாள் welding class சென்று கண்வலியோடு வந்தான். என்ன சொல்லியும் கேட்காமல் மறுநாள் அதே வலியுடனும் கண் எரிச்சலுடனும் கல்லூரி சென்றான். எனக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. எதை நோக்கி இந்த ஓட்டம். நாற்பது வயதில் முதுமை அடைவதற்கா? யாரேனும் புரியவைத்தால் தேவலை.


2 comments:

தருமி said...

tread mill தெரியும்தானே? கீழே 'பூமி' ஓடிக்கொண்டேயிருக்கும். ஒரே இடத்தில் நிற்பதற்குக்கூட நீங்கள் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். அந்த நிலையில்தான் இன்று உங்கள் பையன்...ஓட்டத்தின் வேகம் அவனுக்கு இன்னேரம் பழகியிருக்கும்; இந்த ஓட்டம் நல்ல இடத்தில் அவனை(ரை)நிறுத்தும் என்ற நம்பிக்கைதான். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சந்தர் said...

நன்றி தருமி அவர்களே. பிள்ளைகளுக்கு இந்த ஓட்டம் பழகித் தான் போய்விடுகிறது. தள்ளாத வயதில் இருக்கும் பெற்றோர்களுக்கு? காலத்தின் ஓட்டம் எந்நாளும் பழகுவதில்லை, இல்லையா?