Sunday, April 23, 2006

BAKthavatchaluSAvithri



என்னுடைய தந்தையும் தாயும்.  என் அப்பாவிடம் நினைவு தெரிந்த நாள் முதல் பேசிய வார்த்தைகள் இருகை விரல்களில் எண்ணிவிடலாம்... அவருக்கு
48வது வயதில் paralitic stroke வந்த போது நான் 9வது படித்துக்கொண்டிருந்தேன்.  அரைகுறை படிப்போடு வேலையில் சேர்ந்து... அப்பா 13 வருடங்கள்  61வது வயது வரை அவர் பாரிசவாய்வுடன் இருந்தார் 1981 ஆண்டு மே 21 வரை.
அப்பாவை விதி தாக்கியபோது,  அம்மாவுக்கு வயது 43.  அன்றிலிருந்து ஒரு தியாகி வாழ்க்கை 2005 ஜுன் 7ல் விதி அம்மாவை என்னிடம் இருந்து பிரித்தவரையில்.  
எனக்கு இப்போது வயது 49.... அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.  அம்மாவையும் அப்பாவை இப்போது நினைக்கும் போதும்...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் நெஞ்சார்ந்த நமஸ்காரம்...
உங்களை நான் சேரும் வரையில் என்னுடனே இருங்கள்.

 Posted by Picasa

4 comments:

Anonymous said...

படிக்கையில் எனக்கும் அழுகையாத்தான் வருகிறது. ஆனால் வாழ்க்கையில் எதுதான் நிரந்தரம்?

ஆறுமுகம், வாஷிங்டன்

Anonymous said...

பாரிசவாயுடன் பதிமூன்று ஆண்டுகளா? எனக்குத் தெரிந்து இது record என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சங்கீதா, தேனி, இந்தியா

வல்லிசிம்ஹன் said...

சந்தர் எஙக அம்மா கடவுளுடன் சேர்ந்து இன்னும் 2 நாட்களில் ஒரு வருடம் ஆகிறது. இது எப்பவும் ஆராத துக்கம் தான். அனாலும் நாட்கள் போகபோக வேறு வழித்தடங்களில் மனத்தைத் திருப்ப வேண்டும்.சொல்வது சுலபம்.

சந்தர் said...

வணக்கம் அம்மா தங்களிடம் இருந்து கடிதம் பெற்ற பாக்கியவான் ஆனேன்.

நாட்கள் ஆணாலும் வேறு வழித்தடங்களில் மனதை செலுத்தினாலும் நம்மை அறியாமல் மனம் சில கணம் கனமாகிப் போகிறது.

உங்களுடைய வலைப்பூ மிகவும் அற்புதமாக இருக்கிறது.

அடிக்கடி வாங்க.