கமலஹாசனுடைய படங்கள் அனைத்தும் வரும் முன் உரைப்பவைகளாகத்தான் இருந்திருக்கின்றன. நம்முடைய சிற்ற்றிவுக்குத்தான் சரியாக புலப்படவில்லை.
1978ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள். அதில் அவர் பெண்களை கொலைச் செய்யும் சைக்கோ கேரக்டரில் நடித்திருப்பார். 1979ல் அது போலவே பெண்களை கொலைச் செய்துக் கொண்டு எல்லோரையும் அளற வைத்த சைக்கோ ராமன் என்பவன் பிடிபட்டான்.
1988ல் சத்யா என்ற படத்தில் கமல் வேலையில்லாத படித்த பட்டதாரி வேடத்தில் நடித்திருப்பார். நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியும் சத்யா சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களைக் கண் கொடுத்துப் பார்த்து கோபம் கொள்கின்றான். நல்லவனாக சத்யாவைத் தனது பக்கம் இருக்குமாறு கூறிக்கொள்ளும் ஒரு தீயவனால் சத்யா கைக்கூலியாக்கப்படுகின்றான். தனக்கு இந்நிலமையினை ஏற்படுத்தியவர்களைப் பழி வாங்குகின்றான். அதுபோலவே 1989ல் படித்த பட்டதாரிகள் நக்ஸலைட்டுகளாக உருமாறியதும் நடந்த்து.
1992ல் கமலுடைய தேவர்மகன் படத்தில் ஜாதிய சண்டையை பிரதானமாக்கி கதை சொல்லியிருப்பார். 1993ல் தென்மாவட்டங்களில் தொடர்ந்த சாதிக் கலவரங்களுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதை முன்கூட்டியே கமல் சொல்லியிருந்த்தை யாரும் மறுக்கமுடியாது.
1994ல் மகாநதி படத்தில் ஒரு ஃபைனாண்ஸ் கம்பெனி மூலம் சிறைக்குப்போன கமல் எப்படி ஃபைனாண்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் கூறியிருப்பார். 1996ல் எல்லா டிவி சேனல்களும் மக்களை ஏமாற்றிய பைனாண்ஸ் கம்பெனிகளை பற்றியும் போலீஸ் ஸடேஷனுக்கு படையெடுத்த மக்களையும் தினம் தினம் பட்டியலிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
2000 ஆண்டு வெளியான ஹேராம் படத்தில் பழைய மதக்கலவரங்களை தொட்டுகாட்டியிருப்பார். 2002ல் இந்து முஸ்லிம் கலவரம் நடந்த்தை நாடே அறியும்.
2003ல் அன்பே சிவம் படத்தில் சுனாமி என்னும் வார்த்தையை முதன்முறையாக உபயோகப்படுத்தி இருப்பார். அதுவரை தமிழன் யாருக்கும் தெரியாத வார்த்தை அது. 2004ல் அந்த சுனாமி என்ற வார்த்தையே தமிழன் யாருக்கும் மறக்கமுடியாத வார்த்தையாக மாறிப்போனது.
2006ல் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் தொடர் கொலைகளைப்பற்றி சொல்லியிருப்பார். ,இதே ஆண்டு கடைசியில் டெல்லியை அடுத்த நொய்டாவில் தோண்டத்தோண்ட பிணமாக கிடைத்த அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போனார்கள்.
2008ல் தசாவதாரம் படத்தில் மக்களை தாக்கும் மரண வைரஸ் அமெரிக்காவில் இருந்து வருவதாக காட்டியிருப்பார். 2009ல் நாமெல்லோரும் செய்வதறியாது திகைத்திருக்கும் ஸ்வைன் ஃப்ளு, அதுவும் அமெரிக்காவில் இருந்துதான் வந்த்து எனபது எல்லோருக்கும் தெரிந்தது தானே!
இப்போது என்னுடைய கவலைகள் எல்லாம் கமலின் அடுத்து வரப்போகும் படங்களைப் ப்ற்றிதான்!
7 comments:
தேவர் மகனில் சாதி சண்டையே கிடையாது. ஹீரோவும் தேவன், வில்லனும் தேவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///http://www.parisalkaaran.com/2009/08/120809.html///
ஒரு மேட்டர காபி அடிக்கலாம் தப்பில்ல... கொஞ்சம் மாத்தி கீத்தி அடிச்சா பரவாயில்ல!
வருகைக்கு நன்றி திரு டோண்டு ராகவன். சாதி சண்டை போடும் இருவர் ஒரே ஜாதியாக இருக்கக்கூடாதா என்ன?
என்ன பண்றது பரிசல்காரரே. கொஞ்சம் மாத்தி கீத்தி அடிச்சா மேட்டர் தப்பா போயிடுது! எனக்கு மெயில் அனுப்பியவங்க இப்பத்தான் அனுப்பிச்சாங்க!
இதுமாதிரி ஆளுகளைத்தான் எங்க ஊர்லே கரிநாக்குனு சொல்வாங்க!
http://kgjawarlal.wordpress.com
ஜவஹர் ...வேண்டாங்கண்ணா... கலைஞானியை இப்படியெல்லாம் சொல்லிடாதீங்கண்ணா...
ஆச்சிரியமா இருக்கு. இதே சப்ஜெக்ட்ல நீங்க ஏற்கனவே எழுதியிருக்கிங்க ரொம்ப விளக்கமாவே. எனக்கு வந்தது கொஞ்சம் பழைய குறுந்தகவல் போல.
Post a Comment