Friday, August 22, 2008

அதற்காக இப்படியா ஒன்றுமில்லாமல்… சே!

     நான் நினைக்கவேயில்லை. இப்படியெல்லாம் இருப்பார்கள் என்று. நானும் பார்க்கக்கூடாது என்றுதான் நிறையமுறை நினைத்திருக்கிறேன். ஆசை யாரைவிட்டது? சில சமயம் என்னோட பாழும் மனசுகூட, ‘ஒன்றுமே இல்லாதது கூட நன்றாகத் தான் இருக்கிறது’ என்று நினைக்கிறது. மனசை அடக்க முடிந்தால்தான் நாம் எல்லோரும் ஞானம் பெற்றிருப்போமே! ஒரே தரம் ஒரே தரம் என்று ஓராயிரம் தரம். ஓரக்கண்ணால் பார்க்கிறேன் பேர்வழி என்று வெட்கம்கெட்டு… ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக…

      இனிமேல் ஆகட்டும். நான் பார்ப்பேனா. ஹூஹூம். சரி என்னை விடுங்கள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை என்ன சொல்வது? இப்படியா? ஒன்றுமில்லாமல். சே! வெட்கமே இல்லாமல் எப்படித்தான் முடிகிறதோ இவர்களால்? 

      பட்டினத்தார் பாடியது போல “ காயமே இது பொய்யடா… காற்றடித்தப் பையடா…” என்பது நினைவுக்கு வந்தாலும், இந்த வெட்கம் கெட்ட மனசென்னமோ கேட்பதில்லை. ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று, எத்தனைமுறை ஏமாந்தாலும்… மீண்டும் மீண்டும் எத்தனையோமுறை…

   நம்முடைய வேலையையை பார்த்துக்கொண்டு போகலாம். யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்றும் விட்டுப்போக முடியவில்லை. இந்த பொல்லாத மனசுக்கு பவித்ரம் என்பதே தெரியாது போல இருக்கிறது.

      அட, நாம் தாம் இப்படி என்று நினைத்தால், நிறையபேர் இப்படித்தான் போல இருக்கிறது. இது கூட பரவாயில்லை. இதை சிலாகிக்கிறவர்கள் எத்தனைப் பேர். அடடா… அற்புதம் என்று பரவசப்படுவர்கள் வேறு. 

       இதைக்கூட விடுங்கள். புற்றீசலைப்போல எத்தனைப்பேர் கிளம்பிவிட்டார்கள் ஒன்றுமே இல்லாமல். இதெல்லாம் நல்லதற்கா என்று தெரியவி்ல்லை.

      கொஞ்சம் விஷயத்தோடு வலைப்பூவில் எழுதுங்கப்பா…

3 comments:

Anonymous said...

ada neengalumaaaa...ithaan perrriya mokkai

Anonymous said...

//நான் நினைக்கவேயில்லை. இப்படியெல்லாம் இருப்பார்கள் என்று. நானும் பார்க்கக்கூடாது என்றுதான் நிறையமுறை நினைத்திருக்கிறேன். ஆசை யாரைவிட்டது? சில சமயம் என்னோட பாழும் மனசுகூட, ‘ஒன்றுமே இல்லாதது கூட நன்றாகத் தான் இருக்கிறது’ என்று நினைக்கிறது. மனசை அடக்க முடிந்தால்தான் நாம் எல்லோரும் ஞானம் பெற்றிருப்போமே! ஒரே தரம் ஒரே தரம் என்று ஓராயிரம் தரம். ஓரக்கண்ணால் பார்க்கிறேன் பேர்வழி என்று வெட்கம்கெட்டு… ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக…

இனிமேல் ஆகட்டும். நான் பார்ப்பேனா. ஹூஹூம். சரி என்னை விடுங்கள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை என்ன சொல்வது? இப்படியா? ஒன்றுமில்லாமல். சே! வெட்கமே இல்லாமல் எப்படித்தான் முடிகிறதோ இவர்களால்?

பட்டினத்தார் பாடியது போல “ காயமே இது பொய்யடா… காற்றடித்தப் பையடா…” என்பது நினைவுக்கு வந்தாலும், இந்த வெட்கம் கெட்ட மனசென்னமோ கேட்பதில்லை. ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று, எத்தனைமுறை ஏமாந்தாலும்… மீண்டும் மீண்டும் எத்தனையோமுறை…

நம்முடைய வேலையையை பார்த்துக்கொண்டு போகலாம். யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்றும் விட்டுப்போக முடியவில்லை. இந்த பொல்லாத மனசுக்கு பவித்ரம் என்பதே தெரியாது போல இருக்கிறது.

அட, நாம் தாம் இப்படி என்று நினைத்தால், நிறையபேர் இப்படித்தான் போல இருக்கிறது. இது கூட பரவாயில்லை. இதை சிலாகிக்கிறவர்கள் எத்தனைப் பேர். அடடா… அற்புதம் என்று பரவசப்படுவர்கள் வேறு.

இதைக்கூட விடுங்கள். புற்றீசலைப்போல எத்தனைப்பேர் கிளம்பிவிட்டார்கள் ஒன்றுமே இல்லாமல். இதெல்லாம் நல்லதற்கா என்று தெரியவில்லை.

கொஞ்சம் விஷயத்தோடு வலைப்பூவில் எழுதுங்கப்பா…//

மறுக்கா கூவிக்கிறேன் :-)

Tech Shankar said...

சரிங்க சந்தர். நீங்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறோம். நன்றிங்க