டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டிக்கொண்டிருந்தார்கள். காரணம்?சில ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ ஒரு பக்தர் (?) மர அடிபக்கத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் தெளித்து மரத்தில் மஞ்சள் தடவி குங்குமம் பூசிவிட்டார். சிலநாட்களில் யாரோ ஒரு சிறிய அம்மன் சிலையை வைக்க, பொதுமக்கள் கற்பூரம் காட்டி பரவசம் அடைந்தார்கள். சிறிய பூக் கடைகள் கற்பூரம் விற்கும் கடைகள் அவ்வபோது தோன்றி போலீஸ் விரட்டும்போது மறைந்துக் கொண்டிருந்தது.
இருந்த அம்மன் சிலை சிறியதாக இருப்பதாக யாருக்கோ தோன்றியிருக்க வேண்டும். மிகப்பெரியதாக ஒரு அம்மன் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வளவுதான் அங்கு ஒரு முழுக்கோயில் தோண்றிவிட்டது. அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. பொது மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கிய அந்த அம்மன், யாருக்கோ இடைஞ்சலாகத் தோன்றியிருக்க வேண்டும்.
அந்த அம்மன் சிலை நடைப்பாதையில் சற்றே குறுகலான இடத்தில் இருந்தபோதிலும், மற்ற இடைஞ்சல்களை காட்டிலும் போக்குவரத்துக்கு மிக்ப்பெரிய இடைஞ்சலாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த அரசமரம் மிகப்பெரியது, நடைப்பாதையை முழுமையாக அடைத்திருந்தது.
நேற்று காலை போலீஸ் படையின் உதவியோடு அந்த அம்மன் சிலை அகற்றப்பட்டது.
மாலையில் நான் அந்த வழியாகப்போன போது திடுக்கிட்டே
ன். அந்த அரசமரத்தடியில் புதியதாக மூன்று செங்கற்களை வைத்து, மஞ்சள் குங்குமம் பூசி கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் சில நாட்களில் அந்த செங்கற்களுக்குப் பதிலாக புதியதாக ஒரு அம்மன் சிலை தோன்றலாம். மீண்டும் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்படலாம். மீண்டும் ஒரு கோவில் கட்டப்படலாம்... மீண்டும் அந்தக் கோவில் இடிக்கப்படலாம்... மீண்டும்… மீண்டும்…
