Thursday, May 18, 2006

வாகனங்கள் ஓட்டும் பெண்கள்

சமீப காலத்தில் சென்னையின் நெருக்கடிமிகுந்த சாலைகளில் ஒரு விநோதத்தைக் கவனிக்க முடிந்தது. Pulserகளும் Unicornகளும் Apacheகளும் Bulletகளும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் போது மங்கையர்களின் Scooty Pep, Honda Activa போன்ற Gearless ஸ்கூட்டர்கள் அநாயாசமாக முன்னேறி சென்றுக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிலசமயம் அரசு பேருந்துகளின் ஆக்ரோஷ ஓட்டங்களின் நடுவே மேற்கண்ட Pulserகளும் Unicornகளும் Apacheகளும் Bulletகளும் பதறி அடித்து விலகும் போது, இந்த Scooty Pep, Honda Activaக்கள் கவலைசிறிதும் இன்றி அரசு பஸ்களுக்கு தண்ணி காட்டும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த சுலபமான வண்டியோட்டத்திற்கு கியர் இல்லாமல் இருப்பது தான் காரணமா என்றால் மேற்கண்ட Scooty Pep, Honda Activa வண்டிகளை ஆண்கள் ஓட்டும்போது அவ்வாறு பெண்களுக்கு இணையாக வேகமாக ஓட்டவில்லை. வாகனங்கள் ஓட்டுவதில் பெண்கள் திறமைசாலிகளா? அல்லது பெண்கள் வண்டியோட்டுகிறார்கள் என்று எல்லோரும் ஒதுங்கி வழிவிடுகிறார்களா?

2 comments:

நாகை சிவா said...

பெருபாலானா பெண்கள் வாகனம் ஒட்டுவதில் திறமைசாலிகள் கிடையாது.(இரு சக்கரம்)
நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவர்க்கள் பெருபாலும் இரு கால்களை கொண்டும் பேலன்ஸ் செய்ய முயற்சி செய்வார்க்கள். அது மிகவும் தவறு. அவர்க்கள் ஒட்டும் வண்டியின் காரணமாகவே அவர்க்களால் ஜன நெருக்கடியில் வேகமாக செல்ல முடிகின்றது. நெடுஞ்சாலையில் அவர்க்களால் மற்ற வண்டி வேகத்திற்கு வர முடியாது. ஆண்கள் ஒட்டும் வண்டி பிக்கப் ஆவதற்கு சிறிது நேரமாகும். பெண்கள் ஒட்டும் வண்டியில் ஆண்கள் திறமை காட்ட முடியாதற்கு அவர்க்களுக்கு அந்த வண்டியில் போதிய அனுபவம் இல்லாததே. பள்ளி மாணவர்க்கள் எல்லாம் அந்த வண்டிகளில் சீறி பாய்வதை காண முடியும்.

சந்தர் said...

உண்மைதான் சிவா, சிலபெண்கள் இருகால்களையும் நீட்டிக்கொண்டு வண்டியோட்டும் போது பின்னால் வரும் நமக்கு பயமாகத்தான் இருக்கிறது.

உங்கள் வலைப்பூ இந்த அழகான படங்கள் - உங்களுடைய எழுத்து மிகவும் சிலாகிக்கிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க சிவா.